உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண விளக்கம்-8.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 பெரிய புராண விளக்கம்-இ கொண்ட வேடப் பொலிவினொடும் குலவும் வீதி பணிசெய்யும் அண்டர் அறிதற் களியதிரு அலகு முதலாம் அவைஏந்தி இண்டை புனைந்த சடைமுடியார்க் கன்பர் தம்மை எதிர்கொண்டார். ' தொண்டர்-அந்தக் காஞ்சி மாநகரத்தில் வாழும் திருத் தொண்டர்கள்; ஒருமை பன்மை மயக்கம். சண்டி-கூட்ட மாகக் கூடிக் கொண்டு. எதிர் கொள்ள-தாங்கள் வாழும். நகரமாகிய காஞ்சீபுரத்திற்கு எ ழு ந் த ரு வரி வரும் அந்தத் திருநாவுக்கரசு நாயனாரை எதிர்கொண்டு வரவேற்பதற்காக. எழுந்து-தாங்கள் வாழும் திருமாளி கைகளிலிருந்து புறப்பட்டு வந்து, சொல்லுக்கு-இனிய சுவையைப் பெற்ற செய்யுட் சொற்களுக்கு: ஒருமை: பன்மை மயக்கம். அரசர்பால். அரசராகிய திருநாவுக்கரசு நாயனாரிடத்தில். கொண்ட-தங்கள் திருவுள்ளங்களில் விரும்புமாறு கொண்ட, வேட-சைவ வேடத்தினுடைய. ப்:சந்தி. பொலிவினொடும்-தோற்றப் பொலிவினோடும் குலவும்-மக்கள் நடந்து செல்லும். வீதி-திருவீதிகளில், ஒருமை பன்மை மயக்கம். பணி . பெருக்குவதாகிய திருப்பணியை, செய்யும்-புரியும். அண்டர்-தேவர்களும்: ஒருமை பன்மை மயக்கம். அறிதற்கரிய-தெரிந்து கொள்வ. தற்கு அரியவையாக உள்ள திரு அலகு. திரு அலகுகள்; துடைப்பங்கள்; ஒருமை பன்மை மயக்கம். முதலாம்முதலாக இருக்கும். அவை-அந்தக் கருவிகளை ஏந்திதங்களுடைய கைகளில் எடுத்துக்கொண்டு. இண்டைஇண்டை மலரை. புனைந்த - அணிந்த. مع مس{{نة تي சடாபாரத்தை. முடியார்க்கு- தம்முடைய தலையின் மேற். பெற்றவராகிய திருவதிகை வீரட்டானேசுவரருடைய: உருபு மயக்கம். அன்பர் தம்மை-பக்தராகிய அந்தத் திரு. நாவுக்கரசு நாயனாரை. தம்:அசை நிலை. எதிர் கொண்