உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண விளக்கம்-8.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 31 சலந்தராசுரனைக் கொன்ற சக்கராயுதம் சிவ பெருமானிடத் தில் இருப்பதைத் தெரிந்து கொண்டு அந்த ஆயுதத்தைப் பெறுவதற்காக அந்தத் திருமால் இந்தத் தலத்துக்கு எழுத் தருளிவந்து மால்வணங்கீகவரரை ஒவ்வொருநாளும் ஆயிரம் செந்தாமரை மலர்களைக் கொண்டு அருச்சனை புரிந்து வந்தார். மால்வணங்கீசுவரர் அந்தத் திருமாலினுடைய பக் தியின் ஆற்றலைத் தெரிந்து கொள்ளும் பொருட்ரு ஒரு நாள் ஒரு தாமரை மலரை மறைத் ஒருள, அந்தத் திருமால் சகசிர நாம அருச்சனை புரியும் காலத்தில் ஒரு திருநாமத்துக்குத் தாமரை மலர் குறைவாக இருப்பதைக் கண்டு வருந்தித் தம்முடைய கண்ணையே பறத்து அந்த மால்வணங்கீசுவர, ருக்கு அணிந்து விட்டுத் தாம் புரிந்த பூசையை நிறைவேற்றி னார். அந்தச் சமயத்தில் மால்வணங்கீசர் வெளிப்பட்டு எழுந்தருளி திருமாலுக்கு சுதரிசம்" என்னும் சக்கராயு தத்தையும் தம்முடைய கண்ணைப் பிடுங்கி அகுச்சனை புரிந்தமையினால் பதுமாட்சன்' என்னும் திருநாமத்தை அபும் வழங்கியருளினார். இந்தச் சிவத்தலத்தில் ஒரு கண நேரம் தங்கியிருந்தவர்களுக்கும் முக்தியை வழங்க வேண்டு மென்று திருமால் அந்த மால்வணங்கீசுவரரைக் கேட்டுக் கோண்டார். அவ்வாறே அந்த மால்வணங்கீசுவரர் திரு வருளை வழங்கி விட்டு மறைந்தருளினார். இது சந்திரனும் பூசித்த தலம். மன்னிமாலொடு சோமன் பணி செய, மன்னும் மாற் பேற்றடிகளை' என்று தேவாரத்தில் வரு வதைக் காண்க. இது இக் காலத்தில் திருமால்பூர் என வழங் கும். இந்தத் தலத்தைப் பற்றிப் பழந்தக்கராகப் பண்ணில் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் பாடியருளிய ஒரு :பாசுரம் வருமாறு: - சால மா மலர் கொண்டு சர ವಿನಾವp மேலை பார்கள் கரும்புவர் மாலி னார் வழி பாடுசெய் மாற்பேற்று நீல மார்கண்ட நின்னையே. '