உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண விளக்கம்-8.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 37 கோயில் கொண்டு எழுந்தருளி யிருக்கும் திருக்கழுக்குன்றத் தினுடைய. பாங்கு - பக்கத்தை. அணைந்தார் - அந்த நாயனார் அடைந்தார். திருக்க முக்குன்றம்: இது தொண்டை நாட்டில் உள்ள சிவத்தலம். இங்கே கோயில் கொண்டிருப்பவர் வேதகிரீசு வரர். அம்பிகையின் திருதாமங்கள் பெண்ணினல்லாள் அம்மை, மலைச்சொக்க நாயகி என்பவை. தீர்த்தம் சங்க தீர்த்தம் என்னும் திருக்குளம். இது செங்கற்பட்டுக்குத் தேன்கிழக்குத் திசையில் 9-மைல் தூரத்தில் உள்ளது. ஒவ்வொரு நாளும் நண்பகலில் இரண்டு கழுகுகள் பறந்து இங்கே வந்து தங்களுக்கு அளிக்கும் அன்னத்தையும் நெப் யையும் உண்டு விட்டு மலையை வலமாகச் சுற்றிக்கொண்டு பறந்து போகும் தலம் இது. இங்கே உள்ள சங்கு தீர்த்தம் என்னும் பெரிய திருக்குளத்தில் ஒவ்வோராண்டும் ஒருமுறை சங்கு உண்டாகும் என்பர். இந்தத் தலத்தில் தங்கி சங்க தீர்த்தத்தில் நீராடி மலையை வலமாக வருபவர்களுக்கு எந்த வகையான நோயும் இல்லாமல் அகன்றுவிடும் என்பர். மாணிக்கவாசகருக்கு வேதகிரீசுவரர் குரு வடிவமாய் எழுந் தருளித் தரிசனம் வழங்கியருளிய தலம் இது. இந்தத் தலத்தைப் பற்றிக் குறிஞ்சிப் பண்ணில் திரு ஞானசம்பந்த மூர்த்தி நாயனார் பாடியருளிய ஒரு பாசுரம் வருமாறு: " தோடுடை யானொரு காதில்துரக குழைதாழ ஒடுடை யான்தலை கலனாக இரந்துண்ணும் நாடுடை யான் நள் விருள்ஏம நடமாடும் காடுடையான் காதல்செய் கோயில்கழுக் குன்றே. * இந்தத் தலத்தைப் பற்றித் திருநாவுக்கரசு நாயனார் பாடியருளிய ஒரு திருத்தாண்டகம் வருமாறு: மூவிலைவேற் கையானை மூர்த்தி தன்னை முதுபிணக்கா டுடையானை முதலா னானை தி-3