உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண விளக்கம்-8.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 பெரிய புராண விளக்கம்-இ. பிறகு வரும் 332-ஆம் கவியின் கருத்து வருமாறு: மலையில் வளரும் மயில்கள் என்று கூறுமாறு மாடங் களின்மேல் மேகங்கள் தவழும் இந்த உலகத்தில் ஓங்கி, வளர்ந்து வரும் சீர்த்தியைப் பெற்ற திருமயிலாப்பூரில் திருக் கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் சங்கரராகிய கபாலீசுவரருடைய திருவடிகளை அந்தத் திருநாவுக்கரச. நாயனார் பணிந்து விட்டு, புகழ் வளரும் மாலைகளாகிய பல திருப்பதிகங்களை அந்தக் கபாலீசுவரர் அணியுமாறு புரிந்து உழவாரப் படையை ஆளுகிறவராகிய அந்தத் திருநாவுக்கரக நாயனார் அலைகள் வளர்ந்து வீசும் சமுத்திரக் கரையின் வழியாக எழுந்தருளி திருவொற்றியூரை அந்த நாயனால் அடைந்தார். பாடல் வருமாறு: - . ' வரைவளர்மா மயிலென்ன மாடமிசை மஞ்சாடும் தரைவளர்சீர்த் திருமயிலைச் சங்கரனார் தாள்வணங்கி உரைவளர்மா லைகள்அணிவித் துழவாரப் படையாளி திரைவளர்வே லைக்கரையோய்த் திருவொற்றி ஆர்சேர்ந்தார். வரை-மலையில். வளர்-வளரும், மயில்-மயில்கள்து ஒருமை பன்மை மயக்கம். என்ன-என்று கூறுமாறு. மாட மீசை-மாடங்களுக்கு மேல்; ஒருமை பன்மை மயக்கம். மஞ்சு-மேகங்கள்: ஒரு:ை பன்மை மயக்கம். ஆடும்அசைந்து தவழும். தரை-இந்த உலகத்தில். வளர்-ஓங்கி வளர்ந்து வரும். சீர்-சீர்த்தியைப் பெற்ற த்:சந்தி. திருமயிலை-திருமயிலாப்பூரில் திருக்கோயில் கொண்டு. எழுந்தருளியிருக்கும். ச்:சந்தி, சங்கரனார்-சங்கரராகிய கபாலீசுவரருடைய, சங்கரன்.சுகத்தைச் செய்தருளுபவன். தாள்-திருவடிகளை; ஒருமை பன்மை மயக்கம். வணங்கி: -அந்தத்திருநாவுக்கரசு நாயனார்பணிந்துவிட்டு,உரை-புகழ். 聲 聯 ...