இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
இல்லை,' என்று சொல்லி என்னைத் தட்டிக் கொடுத்தார்.
ஆதலால் நான் மெதுவாக எழுந்து தலை குனிந்து நின்றேன். பிறகு நான் கணக்கப் பிள்ளையிடம் அந்தப் பொன் நாணயத்தைக் கொடுத்தேன். அவர், 'ஆம்; நான் போக்கடித்த பொன் நாணயம் இதுதான்--இதுதான்’ என்று சொல்லிக்கொண்டே அதைத் திருப்பித் திருப்பிப் பார்த்தார். பிறகு அவர் என்னை அருகே அழைத்து என் முதுகில் தட்டிக் கொடுத்து, ஒரு சிறிய வெள்ளி நாணயத்தை என்னிடம் கொடுக்க வந்தார். நான் அப்போது மிக்க கூச்சத்துடன் என் எசமானர் முகத்தை நோக்கினேன். உடனே, அவர், 'குப்பா, அதைப் பெற்றுக்கொள்; அந்த இரண்டணா உனக்கு இனாம் ஆகும். கடைக்குச் சென்று நீ
44