உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மக்கள் நெஞ்சில்-எம்-ஜி-ஆர்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 மக்கள் நெஞ்சில் எம்.ஜி.ஆர். பேரரசர் ஹர்ஷர் காலத்தில், காஞ்சிபுரத்து தர்ம பாலரிடம், சீனத்துப் பயணி யுவான்சுவாங் தத்துவப் பாடங்கள் கேட்ட நாலாந்த பல்கலைக் கழகத்துக் கட்டிடத்தைப் போல, உலகம் வியந்த அந்தக் கல்விக் கோட்டத்திற்கு நிகராக உனது மனக்கோயில் காட்சி தருமா?

சோழர் வரலாற்றில் பொற்காலம் படைத்த மாமன்னன் இராசராச சோழன், அவன் அடையாளமாகத் தஞ்சைப் பெருவுடையார் கோயிலை வானளாவ எழுப்பிச் சாதனைப் படைத்ததால், இன்றும் சரித்திரத்தால் புகழப்படுகிறானே, அந்தக் கோயிலின் சாயலைப் போலவா உனது எம்.ஜி.ஆர். சுவடுக் கோவிலைச் சாதித்திருக்கிறாய்?

வடநாட்டு மன்னர்களை வாகை சூடி, அவர்கள் தலைகளிலே கங்கை நீரைக் குடம் குடமாகச் சுமக்க வைத்து, தனது வடநாட்டு வெற்றியின் நினைவாக, கங்கைக் கொண்ட சோழீச்சுரம் என்ற அற்புதக் கோயிலை அமைத்தான்ே மதுராந்தகச் சோழன், அத்தகைய வீர வரலாற்றுச் சின்னமாக விளங்குமா உனது எம்.ஜி.ஆர். கோட்டம்?

காவா நாவினாரம் கனக விசயர் என்ற வடநாட்டு மன்னர்கள் தலைகளிலே, இமயக் கற்களைச் சுமந்துவரச் செய்து கண்ணகிதேவிக்குக் கற்பாலயம் கண்டானே, சேரன் செங்குட்டுவன் என்ற புறநானூற்று வீரன், அதற்கு நிகரான மறக் கோட்டமா உனது கோட்டம்?

தில்லை மாநகரிலே தோற்றமளிக்கும் தில்லையம் பலத்திற்கும், திருவரங்கக் கோபுரத்திற்கும் பொன்வேய்ந்தான்ே, பொன்வேய்ந்த பெருமாள் என்ற பொன்றாப் பெயர் பெற்ற சடையவர்மன் சுந்தர பாண்டின் . அதுபோல, எம்.ஜி.ஆர். கோட்டத்திற்குப் பொன் வேய்ந்தா - அழகும் பொலிவும் ஏற்படுத்தியிருக்கிறாய்?

விசய நகரப் பேரரசரான கிருஷ்ணதேவராயரைப் போன்றோ, மதுரை நாயக்க மன்னர்களைப் போலவோ, தமிழர் சமையப் பண்பாட்டுக் காவலர்களாக விளங்கிட, ஆயிரங்கால் மண்டபங்களோ, வசந்த மண்டபங்களோ, திருமணக் கூடங்