உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மக்கள் நெஞ்சில்-எம்-ஜி-ஆர்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 29

களோ கட்டி, எதிர்கால மக்கள் தங்கி, வியந்து, விழாவெடுத்துப் புகழுமாறு எம்.ஜி.ஆர். காவியத்துள் எழில் மண்டபங்கள் ஏதாவது அமைத்துள்ளாயா?

மொகலாயர் காலத்துக் கட்டிடத்திற்குரிய சான்றுகளைப் போல, தாஜ்மகால், ஜூம்மா மசூதி, குதுப்மினார் இன்ன பிற அழகு ததும்பும் நினைவுச் சின்னங்களை நிறுவி, பார்த்தால் பிரமிப்பும், நினைத்தால் வியப்பும் எழவா, எம்.ஜி.ஆர். சிந்தனைச் சின்னத்தைச் செதுக்கி இருக்கின்றாய்?

இல்லையென்றால், இன்றைய எல்.ஐ.சி. கட்டிடத்தைப் பார்க்கும் மக்கள், கழுத்தைப் பின்புறம் சாய்த்து, கண் களிரண்டையும், வானத்தை நோக்கி, காண்கின்றார்களே, அந்த உயர நோக்கையா உனது எம்.ஜி.ஆர். புத்தகக் கோயில் பெற்றிருக்கிறது? .

வரலாற்றுக் காலவாரியாக வந்த மன்னர் இனங்கள், உலகில் நிறுவிய கட்டிடக் கலை அற்புதங்களையா செய்திருக் கிறாய் என்ற வினாக்களைத் தொடுத்து, எனது எண்ணப் பணியை ஊனப்படுத்தாதீர்கள்!

மன்னனா நான்? அல்லது அரச பரம்பரையா? கருவூலப் பணத்தை, நினைத்த நேரத்தில் எண்ணியபடி செலவழித்து, மண்ணுலகிலே அற்பதங்களை ஆற்றிட:

எழுத்தை ஆட்சி புரிகின்ற ஓர் ஏழை நான் என்னாலியன்ற ஒர் எண்ணக் கோயிலை, எனது சிந்தனைகளைக் கொட்டிக் குவித்துக் கண்ணிரோடு எழுதுகின்றேன்! அவ்வளவுதான்்!

இந்தக் கோயிலைக் கட்டி முடிக்க, நான் அடுக்கிய எண்னக் கற்கள், வித்துவத்தால் சூளை போட்டனவல்ல!

என்னையே உணர்ந்து, என்னிலே புதைந்து, அவரோடு பழகிய அன்பு சொற்களால் வெந்த விவேகங்கள், கற்களாக மாறி இருக்கின்றன.

கறை படாத கற்களைக் கொண்டு, கறை சூழா சுண்ணத்தைத் தேர்வு செய்து, கறை காண முடியாத ஏழை