உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மக்கள் நெஞ்சில்-எம்-ஜி-ஆர்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3: மக்கள் நெஞ்சில் எம்.ஜி.ஆர்.

ஐந்தாவது நிலைக் கட்டிடம் குளிர் காற்றைக் குறைத்து, மிதப்படுத்தி, கட்டிடத்திற்குள் அனுப்பும் குறுங்கண்களைக் கொண்ட பலகணிகளை உடையதாம்! அதாவது ஏ.சி. சாதனம் போன்ற குளுகுளு அமைப்புள்ள மாடியாம்!

ஆறாம் மாடி, கோடை காலத்தில், தென்றற் காற்றைத் திரட்டி, மாளிகைக்குள் அனுப்பும் சாளரங்களைக் கொண்ட கட்டிடமாம்! அதாவது வெப்பப் புழுக்கம் இருக்காது. மாறாக, சிலுசிலுவென தென்றல் சிலிர்க்குமாம்!

ஏழாம் மாடி, வேயா மாடமாம்! இரவு நேரங்களில், கண்ணகியும் . கோவலனும் தங்கி, வெள்ளுலாவின் - அதாவது முழு நிலவின் இன்பத்தை அனுபவிப்பார்களாம்!

இத்தகைய அரிய அற்புத பொறியியல் நுட்பங்களைக் கொண்ட கட்டிடங்கள் கணக்கற்றிருந்த அந்த பூம்புகார் இன்று

ឧៈ?

காவிரிபூம் பட்டினமும், அயல்நாட்டு - வணிகர்களின் வியாபாரப் பெருக்கமும், பாண்டி நாட்டு முத்து வணிகர்களின் கூட்ட நெரிசல்களும் கொண்ட தொண்டி, கொற்கை, துறைமுக நகரங்களும், கடல் ஏப்பம் விட்டன போக எஞ்சிய இடங்கள்தாமே இன்று உள்ளவை?

இக்கொடுமைகள் அறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் சதுக்கங்களுக்கும் ஏற்படா என்பதற்கு என்ன பாதுகாப்பு? போகட்டும்...!

ஆனால், எவை எப்படி அழிந்தாலும் சரி, எழுத்துக் கோயிலால் உருவான எந்த மனிதாலயமும், மக்கள் மனப் பெட்டகத்துள்ளே எண்ணச் சிலையாக அமையாதா என்ன?

அந்த நூலோவியச் சிலை, தமிழ் மக்களால் வழிவழியாகக் காக்கப்படும் என்ற உணர்வுகளை உருவாக்காவா? இதுதான்ே அழியாத கற்கோயில் சின்னம்?

எனது இந்த எண்ணக் கோயிலுக்குக் கருத்துப் பரிமாறியவர்களை நான் குறிப்பிட்டே ஆகவேண்டும்!