உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மக்கள் நெஞ்சில்-எம்-ஜி-ஆர்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 33

அவர்கள் ஐவர்! அந்தப் பெயர்களை நான் சொல்வி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை!

ஆம்! தனித்தனியாக இருக்கின்ற இயங்குகின்ற பஞ்சபூதங்களே! அவை உலகிற்குரிய உயிர்ப்புக்கள் என்பதால், அவற்றை உயர்திணைகளாக்கி வணங்குகின்றேன்!

கூட்டுறவோடு வந்து அவர்கள் கூறினார்களா என்று கேட்காதீர்கள்! கும்பலோடு வந்திருந்தால், நான் உயிரோடு இருந்திருப்பேன்!

அவர்கள் தனித்தனியாகப் பிரிந்தால், நான் இறந்ததாகப் பொருள்:

இதை நான் எழுதும்பொழுது, நான் உயிருடனும் இல்லை; பிறக்கவும் இல்லை.

ஏனென்றால், பூதங்கள் ஒவ்வொன்றும் வந்தும், போய்க் கொண்டும் இருந்தன!

எவரையும், ஏமாற்றலாம்! அந்த ஐந்தை, ஏமாற்ற எவராலும் முடியாது!

வலி கட்டாயமாக, யாராவது ஒருவேளை முயன்றால், அதைக் கண்டு, 'பூதங்கள் ஐந்தும் உள்ளே நகும்' என்று, நமக்கு புத்தி கூறுவார் திருவள்ளுவர்!

இந்த எண்ணக் கோயிலை எடுத்தவன் ஒர் எழுத்தாளனா? என்று கேட்காதீர்கள்!

நான் எழுத்தாளன் அல்லன்!

அதற்காகக் கவிஞனும் அல்லன்!

எண்னத்தை ஆள்பவன் நான்! எனது ஆட்சியின் திறன், சாதனைகள் இதனுள்ளே இருக்கின்றன!

இதோ, ஒரு 'திருத்தொண்டர் மாக்கதை’ என்று கூறி விழாவெடுத்து, தெருத் தெருவாகப் பட்டி மன்றங்களோ பக்திச் சொற்பொழிவுகளோ இயக்க மாட்டேன்!