புலவர் என்.வி. கலைமணி 35
சிதம்பரம் நகரிலே, அறிஞர் அண்ணா அவர்களுக்கு கார் ஒன்று பரிசளிப்பு தந்தனர் அவரது தம்பியர்!
கார் சாவியை வழங்கியவர் அன்றைய புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். அவர்கள்.
மேடையிலே, அறிஞர் அண்ணா, நாவலர், கலைஞர், கவிஞர் கண்ணதாசன், ஈ.வெ.கி. சம்பத், என்.வி. நடராசன், தில்லை வில்லாளன், பொன். சொக்கலிங்கம் உட்பட மற்றும் பலர் அமர்ந்திருந்தனர்.
அப்போது எம்.ஜி.ஆர். பேசுகையில், 'கழகத்தில் இன்று தலைவர்களாகி இங்கே அமர்ந்திருப்பவர்கள் எல்லாம், சந்தர்ப்பவசத்தால் தலைவரானவர்கள்' என்றார். திணறினர் - திரண்டவர்கள்!
உடனே, மேடையில், இருந்த கலைஞர், 'ஏன், எங்களைப் பார்த்தால், உனக்குத் தலைவர்களாகத் தெரியவில்லையா?” ஆவேசமாகக் குரல் கொடுத்தார்:
எம்.ஜி.ஆர். மீண்டும் பேசும்போது, 'உங்களிடத்தில் எதையும், மன்னிக்கும் தாய் மனப்பான்மை இல்லை. என் தாயிடத்திலே காணப்படும் மன்னிக்கும் மனப்பான்மையை அறிஞர் அண்ணாவிடம் காண்கின்றேன். அதனால்தான்் அவரைத் தலைவராக ஏற்றுக் கொண்டேன்' என்றார்.
அன்று அவர் குறிப்பிட்டதைப் போல, ஒரு தாயின் மன்னிக்கும் மன உணர்வை - தாய்மைச் சக்தியிடம், தாய் குலத்திடம் இருப்பதைப் பார்த்து, அவர் எப்போது பேசினாலும், எங்கே பேசினாலும், 'என்னை வாழ வைக்கும் தாய்க் குலமே' என்று தான்் பேச ஆரம்பித்தார்!
அதே தாய்மைச் சக்தியை - இறை வழிபாட்டிலும், கண்டு அவர் போற்றியதால், மூகாம்பிகை அம்மையைத் - தன் இறை வழிபாடாக ஏற்றுக் கொண்டார்:
அத்தகைய பழந் தமிழரின் தாய்மைச் சமுதாய மரபு வழிபாடுடைய எம்.ஜி.ஆர். கல்லறையை, நானும் திராவிட