உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மக்கள் நெஞ்சில்-எம்-ஜி-ஆர்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 45

குன்றேறி நின்று அதைக் குவலயத்திற்குக் கூறக் காவிரியை உவமைப்படுத்து!

ஆனால், இந்த உவமையும் எங்களுக்குத் தெரிந்தது தான்ப்பா புரியம்படி வேறொன்று இருப்பின் புகல்வாயோ...!

அப்படியா...! ஊம்....! கங்கு கரையற்ற நீல வானம் என்று அவரைக் கூறாலாமோ...!

அதுவும் நாங்கள் அறிந்ததுதான்் பொன்மனச் செம்மலின் கொடை உள்ளம் - அன்புள்ளம் - பண்புள்ளம் - மிகவும் விரிந்தது - பறந்தது, என்பதற்காகச் சொல்கிறாய் - இல்லையா? அதுவும் புரிகிறது:

விரிந்த உள்ளத்தை எங்களால் தொட முடியும். ஆனால் - வானத்தை நாங்கள் தொட்டதுமில்லை! - அது தேவையும் இல்லை!

அவ்வாறானால், ஏன், இப்படி அழைக்கக் கூடாது? 'தன்நீர்மை குன்றா நெடுங்கடலென்று!”

புரட்சித் தலைவரின் முத்து போன்ற கருத்துக்கள், பவளம் போன்ற எண்ணங்கள், ஆழ்ந்த அறிவின் காரணமாக ஏற்பட்ட நடுக்கடலின் அமைதி, இவற்றைச் சுட்ட, இந்த உதாரணத்தை நீர் செப்புகின்றீரோ...!

ஆனால், செந்தமிழ் வேளிர் எம்.ஜி.ஆர். அவர்களிடத்தில் ஆளை விழுங்கும் சுறா, திமிங்கலம் போன்ற எண்ணங்கள் எப்போதும் இருந்ததில்லையே!

அப்படியானால், எங்கள் கம்ப்யூட்டர் தவறானது என்கின்றீரா? விஞ்ஞானத்தையே விலா எலும்பு ஓடியத் தாக்குகின்றிரே?

இல்லை, இல்லை...! நீர் போடும் கணக்குதான்் தவறு: நன்றாக ஆர, அமர சிந்தித்துப் பேசும்......

உலகத்திலேயே மிகமிக உயரமான இமயமலை என்றால் என்ன? இதனைக் கூடவா மறுத்துரைப்பீர்?