உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மணமக்களுக்கு.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்த் திருமண முறை

நாவலர் ச. சோமசுந்தர பாரதியார் M.A., B.L. அவர்களும், தமிழ்த் தென்றல் திரு.வி.கலியாண சுந்தர முதலியார் அவர்களும்,

நடத்தி வந்தவை

 1. தமிழ்த் தாய் வாழ்த்து—இறைவணக்கம்.

 2. திருமணத்தை நடத்தி வைக்கத் தலைவரை வேண்டுதல்.

 3. தலைவர் முன்னுரை

 4. மணமகனுக்குத் தாய்மாமன் மலர் மாலை அணிதல்

 6. மணமகன் பெற்றோர் திருவடிகளில் சந்தனம், மலர் வைத்து வணங்கி எழுதல்.

 7. மணமகள் பெற்றோரின் திருவடிகளில் சந்தனம், மலர் வைத்து வணங்கி எழுதல்

 8. மணமகன் உறுதிமொழி :

“தாய்மார்களே! பெரியோர்களே! தங்கள் எல்லோர் முன்னிலையிலும் என் அருகிலுள்ள திருச்செல்வி……யை நான் இன்று என் வாழ்க்கைத் துணைவியாக ஏற்றுக் கொள்ளுகிறேன். வாழ்விலும், தாழ்விலும், இன்பத்திலும், துன்பத்திலும் உடனிருந்து, சம உரிமை வழங்கி, வள்ளுவர் நெறி நின்று. இல்லறத்தை இனிது நடத்துவேன் என உங்கள் முன்பு உறுதி கூறுகிறேன்.”
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணமக்களுக்கு.pdf/41&oldid=1646387" இலிருந்து மீள்விக்கப்பட்டது