உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மதிவாணன்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) ம தி வா ன ன் 215

இருகான்குள்ளன; அவ்வாயில்களு ளொவ்வொன்றினுங் காவலாளர் உறை நீத்த வாளினர் உலம்பொரு கோளினர் கழலிடு காலினர் கவச யாக்கையர் சேகரச் சென்னியர் செங்கட் டியினர் உரத்தகுரலினர் ஒய்வின்றி யுலாவி நிற்பார். அதன்பினர் அவ்வாயில்களா அட்புகுந்து பார்ப்புழிக் கோணத் தின் உட்புறம் யாவும் ஆயுத சாலையும், யானேச் சேவகமும், குதிரை கிலேயும், தேர் கிலேயும், விார்கள் வாட்போர் மற்போர் முதலியன பயிலிடமுமாம். இவற்றினின்றும் வெள்ளிடைவந்துழி வையாளிவிதி எதிரே தோன்றும். அஃதோர் வளைந்த தெருவாம்; அதன் கண்ணே அரசன் உலாவரும் வழக்கமுண்டாதலின் அதற்கு அரச விதி யென்னுமொரு பெயருளது. குதி ரைகள் கொட்புற வுலவுஞ் செண்டுவெளியு மதுவே. அவ் வையாளி வீதிக் குட்பட்டுத் தோன்றுவது மாசிவீதியாம். இது சதுரமான வொரு தெரு, காற்றிசையினும் பாற்பட்டு நான்கு வெவ்வேறு தெருக்களெனத் தோன்று மாதலின் அது கீழைமாசி வீதி, தெற்கு மாசிவீதி, மேலை மாசிவீதி, வடக்கு மாசி வீதியென நால்வேறு பெயர்த்தாம். கீழை மாசிவீதியில் தென்பகுதி தொடங்கிக் தெற்கு மாசி வீதியிற் கீழ்ப்பகுதி யிறுதி காறம் பரந்தி ருக்கும் அரசன் மாளிகை, மேலே மாசிவிதியின் கண் தானேத்தலைவர் மாளி கையும் வடக்குமாசி வீதியின் கண் மந்திரியார் மாளிகையு முளவாம். இனி மாசி வீதிக்குட்பட்டு ஆவணி மூலவிதி, சித்திரை வீதி முதலிய பல விதிகளி ருக்கின்றன. இவ்விதிகளெல்லாம் அந்தணர் அரசர் வணிகர் வேளாளர் முதலிய நால்வகைச் சாதியாருமே வசிப்பவராவார். இது நிற்க, பெருங் தெருக்களை இடை கின்றியைக்குஞ் சிறு மறுகுகள் பலவுள; அவையாவும் பெரும்பாலும் பரத்தையர் பாணர் கூத்தர் கொல்லர் தட்டார் முதலிய பஃ

  • வையாளிவீதி=செண்டுவெளி=குதிரைகள் சுழன்று செல்லுமாறியற்றிய வையாளிவீதி, புறநானூற்றில் 174, 220-ம் பாட்டுக்களினுரையின்கண், முற்றம் மன்றம் என்ற வீரிடங்களிலுஞ் செண்டு வெளியென்றரை யெழுதப்பட் டிருக்க லான் அது வெளியென்பதும், பெரிய புராணத்துக் குதிரைச் செண்டென்று கூறியதற்கேற்ப வாலுளைப் புரவியிற்பொருவில் செண்டாடிப் போர்க்கலே, தெரித லின், எனக் கம்பராமாயணத்திலுங் கூறப்பட்டிருத்தலான் அவ்வெளி செண்டு வெளியென்பதும் வெளியாயின. திேல் வையாளிவிதி திகழ்செண்டு வெளியே யென்ப, சாதியாம் புரவிவட்டங் திருமுற்றர் தானுமப்பேர்’ என்று சூடாமணி நிகண்டு மிக்கூற்றினை வலியுறுத்து மாறறிக. அன்றியும், பருமகின்றுகுமணி பால் சொரிவதாப்பகட்டி, னருவிமும்மதம் விலாழி நீராவடிமிதித்த, லுருவவன்மா மிடிப்பதாகிலம் வலியுறுப்பார், விாவிகின்ற வச்சூழலொத்துள செண்டுவெளிகள்: எனத் தணிகைப் புராணமுடையார் கூறுதலையுமுற்று சோக்குக. அற்றேற்செண்டு வெளியை வையாளி வெளியென்னது வையாளி வீதியென்ற தென்னயெனின், ஒளபசாரிக நியாயம்பற்றி யவ்வாறறைந்ததென்க. செண்டு வெளிகளிற் குதிரை யேறிச் செல்வோர் தங்கள்முதுகுகளே தாங்களே பார்க்கலாம் படியாகக் குதிரை கள் விரைந்து செல்கின்றன என்பதாம்,
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதிவாணன்.pdf/8&oldid=655656" இலிருந்து மீள்விக்கப்பட்டது