பக்கம்:மன்னுயிர்க்கன்பர்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல்கலைக் கழகம் 17 பல்கலைக் கழகத்தில் மெய்ந்நூல் போதிப்பதற்குரிய பயிற்சிப் பட்டத்தைப் பெற்ருர். பல்கலைக் கழகத் திலேயே விரிவுரையாளராக அவர் நியமிக்கப் பட்டார். இருபத்தெட்டாவது வயதில், ஒரு சமயக் கல்லூரிக்கு அவர் முதல்வர் ஆயினர். பாக் என்பாரைப் பற்றி அவர் பிரஞ்சு மொழியில் எழுதிய புத்தகம் 1905-இல் வெளியாயிற்று. புத்தகப் பிரதிகள் பல விரைவில் விலைபோயின. அவ்வாண்டில் விடார் என்னும் ஆசிரியரோடும் வேறு சில இசைஞர்களோடும் கூடி, சுவைட்சர் பாரீஸ் நகரத்தில் ஒரு சங்கம் அமைத்தார். அந்தச் சங்கத்தின் வாயிலாகப் பாக் இசைப்பாடல்களைத் தக்க முறையிற் பரப்புவதே நோக்கம். சுவைட்சர் அடிக்கடி ஸ்டிராஸ்பர்கிலிருந்து பாரீஸ் நகரத் திற்குப் போய், இசையரங்குகளில் தாமே இசைக் கருவியை இயக்கினர். அவர் எழுப்பும் இசையைக் கேட்க மக்களுக்குப் பேரார்வம் உண்டாயிற்று. இவ்வாறு சமய நூற்கல்வி, மெய்ந்நூற் கல்வி, இசைக்கல்வி ஆகிய கலைகள் வழியாகச் சுவைட்சர் புகழ் பெற்றவராக இருந்ததால், இத்துறைகளுள் ஒன்றிலோ பலவற்றிலோ மேன்மேலும் உழைத்து அவர் உலகத்திற் பெரும்புகழை நிறுவி இருத்தல் கூடும். ஆயினும், அத்துறைகளுள் ஒன்றனில் அவர் எண்ணம் செல்லாமல், வேருெரு துறையில் செல்வதாயிற்று. அதற்குக் காரணம் அவர் முன்னரே பிறர்க்காக உழைக்கவேண்டுமென்று செய்திருந்த முடிவும், ஆப்பிரிக்காவில் நீக்ரோ toão or 2-pišić5th GJBrussé (Sleeping Sickness)