பக்கம்:மன்னுயிர்க்கன்பர்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 பல்கலைக் கழகம் இடர்ப்பட்டு நூற்றுக் கணக்காக இறக்கிருர்கள் என்று கேள்விப்பட்ட செய்தியும் ஆகும். அந்நோய் உற்றவர்கள் தலைவலியினுலும், பெரு மயக்கத் தினுலும், பெருஞ் சோர்விலுைம் இடருற்று இறந்துபடுகிருர்கள் என்பதைக் கேள்வியுற்ருர். உடன், பல்கலைக் கழகத்தில் மறுபடியும் மாணவ ராகச் சேர்ந்து, மருத்துவத் தேர்வு பெற்று, ஆப்பிரிக்க மக்களுக்கு உதவி செய்யவேண்டும் என்று அவர் கங்கணம் கட்டிக்கொண்டார். பிறர்க்கு உதவி செய்யவேண்டுமென்று மனத் தினுல் எண்ணியதைச் செயற்படுத்துதற்கு உரிய காலம் அணுகிக்கொண்டிருந்தது. இவ்வாறு, தாம் முடிவு செய்ததைத் தெரிவித்து, தம்முடைய பெற் ருேர்களுக்கும் நண்பர்களுக்கும் உடனே கடிதம் எழுதிவிட்டார் சுவைட்சர். பலர் அவருடைய முடிவினின்று அவரை அசைக்கப் பார்த்தனர். ஆப்பிரிக்க மக்களுக்கு உதவி செய்யவேண்டு மென்ருல், நல்லாசானுகச் சென்று, போதகராகச் சென்று, தொண்டு ஆற்றக் கூடாதா என்று பலர் கேட்டனர். மருத்துவத்தைப் பற்றி ஒன்றும் அறியாத அவர் மருந்தினைப் பற்றிப் புதுவதாகக் கற்றுத் தேர்ந்துதான் தொண்டு ஆற்றப் போக வேண்டுமா என்று கேட்டனர் சிலர். ஆசிரியர் விடார் என்பார்கூட அவரை மருத்துவத்தினின்று தடுத்து இசையில் திருப்புதற்கு முயன்ருர். சுவைட் சர் அப்பணியில் இறங்காது போளுல், பிறர் ஒன்றையும் இழக்காமல் அப்பணியில் ஈடுபடுதல் கூடுமே என்று சிலர் சொன்னர்கள். சுவைட்சரோ