16
மலருக்கு மது ஊட்டிய வண்டு
16 மலருக்கு மது ஊட்டிய வண்டு
சோபியாவைப் பார்த்துக் கண்களைச் சிமிட்டியபடி
'இஸ்...இட்...?' என்று ஆச்சரியத்துடன் கேட்டான் பாபு.
"ஆமாம்; சோபியா சில குறிப்பிட்ட பாட்டுக்களைப் பாடினால், நிச்சயம் உங்கள் மனக்கண் முன் ஜாக்ஸனும்' 'கோனி"யும் அப்படியே வந்து நிற்பார்கள்!'
பாபு மகிழ்ச்சியில் மூழ்கிப் போனான். "அப்படியானால் நான் அதிர்ஷ்டசாலிதான். இன்று சோபியாவை நான் லேசில் விடப்போவதில்லை!' என்று பாபு கூறிக்கொண்டிருக்கும்போதே, டேவிட் கைக் கடியாரத்தைப்பார்த்துவிட்டு, "புதன்கிழமை, சார் ஊரிலி ருந்து வந்து விடுவார். டவுனுக்குப் போய்க் கொஞ்சம் தம்பூரா தந்தி வாங்க வேண்டிய வேலை இருக்கிறது. நீங்கள் பேசிக் கொண்டிருங்கள்; நான் சீக்கிரம் வந்து விடுகிறேன்' என்று எழுந்தான்.
உடனே பாபு, 'பேச்சாவது... மூச்! நான் சோபியா வைப் பாடச் சொல்லி ரிகார்ட் பண்ணப் போகிறேன். நீங்களும் சீக்கிரமாக வந்து விடுங்கள்’’ என்றான்.
வாசல்வரைச் சென்று அனுப்பிவிட்டு டேவிட்
டேவிட்டை பாபு உள்ளே வந்ததும் கல்யாணி அம்மாள்,
எங்கே பாபு?’ என்று கேட்டாள்.
"அப்பாவுக்குத் தம்புரா தந்தி வாங்க டவுனுக்குப் போயிருக்கிறான்,' என்றான்.
"அப்படியா,' என்ற கல்யாணி அம்மாள் சோபியா வின் அருகே உட்கார்ந்து ஆசை தீர, மனம் விட்டுப்பேசிக் கொண்டிருந்தாள். இறந்து போன தன்மகள் உயிரோடு இருந்தால்-இந்த சோபியா வயதுதான் இருக்கும். பொங்கி வந்த கண்ணிரை மறைத்தபடி உள்ளே போய்