உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மலரும் உள்ளம்-1.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்நாளில் உலக மக்களை அலைத்துக் குலைத்து அல்லற் படுத்தும் போர் முதலிய பீடைகள் ஒழிந்து, அமைதி திலவ வேண்டுமாயின் அன்பு என்னும் மிக்கட் பண்பு இம்மாநிலத்தில் பெருகவேண்டும் என்று ஆசைப் படுகின்றார் கவிஞர். அன்பு பெருகுமாயின் அருள் பிறக்கும்; அருள் பிறக்குமாயின் அந்தமில்லாத இன்பநிலை வந்தெய்தும் என்று ஆன்றோர் அருளிய அரிய உண்மையைப் பிள்ளைகள் நிலைக் கேற்பப் பேசுகின்றார் கவிஞர். சிறந்த நீதிகளைக் கதை வடிவாக உணர்த்துதலே சிறுவர்க்கேற்ற நெறியாகும். நல்லவன் என்று பெயர் எடுப்பதற்கு தேடுநாள் செல்லும்; கெட்டவன் என்ற பெயரை சட்டென்று துவிடலாம் என்ற உண்மையை மாம்பழக் கதையில் வைத்துச் சுவைபட விளக்குகின்றார் கவிஞர். இவ்வாறே உலக வாழ்வில் ஏற்றமடைதல் அரிது; இழிவடைதல் எளிது என்னும் சிறந்த உண்மை மலையும் வாழ்வும் என்ற கவிதையில் அழகுறக் காட்டப்படுகின்றது. அருமையான தமிழ்ச் சொற்களையும் எளிமையாக எடுத்தாளும் திறம் இக்கவிஞரிடம் உண்டு. கப்பல் நல்ல கப்பலாம். டலில் செல்லும் கப்பலாம். கலங் கரை விளக்கினால் காையைக் கண்டு சேருமாம். என்ற பாட்டிலே கலங்கரை விளக்கு' என்னும் பழங்காலச் சொல்வைப் பழகு தமிழாக்கிவிட்டார் கவிஞர். பழமையும் புதுமையும் இவர் கவிதைகளிலே கலந்து விளையாடும். வட்ட மான தட்டு, தட்டு நிறைய கட்டு. என்று பாடுகின்றார் கவிஞர். பழைய தட்டிலே புதிய லட்டைக் காண்பது ஒர் ஆனந்தமன்றோ? இத்தகைய நயஞ்சான்ற கவிதையை உள்ளம் மலர்ந்து உதவிய கவிஞர் வள்ளியப்பா அவர்களுக்குத் தமிழகத்தார். நன்றி என்று உரியதாகும். சென்னை, -ரா.பி. சேதுப்பிள்ளை 3མཁ3ཨ་ཁུ་5འི་ཤྲཱི་

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-1.pdf/10&oldid=859400" இலிருந்து மீள்விக்கப்பட்டது