உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 5.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 II. எழுவாய், பயனிலை,செயப்படுபொருள்.

நாய் ஓடியது - இவ்வாக்கியத்தில் இரு சொற்கள் இருக்கின்றன. அவற்றில் 'நாய்' என்பது பெயர்ச் சொல். ஓடியது என்பது வினைச்சொல். ஒரு வாக்கியத்தில் பெரும்பாலும் வினைச்சொல்லே பயனிலையாக வரும். அப் பயனிலையோடு 'யார்' அல்லது 'எது' என்ற சொற்களில் ஒன்றைச் சேர்த்துக் கேள்வி கேட்கவேண்டும். 'எது ஓடியது?' என்று கேட்டால், அக் கேள்விக்கு 'நாய்' என்று பதில் வருகிறது. 'நாய்' என்பதே எழுவாயாம். வினைச்சொல்லே பெரும்பாலும் பயனிலையாய் வரும்.

"பயனிலையோடு எது அல்லது யார் என்ற சொற்களில் பொருத்தமானதைக் கொண்டு கேள்வி கேட்டால் அதற்கு வரும் விடையே எழுவாய் ஆகும்".

குறிப்பு: எழுவாய் இல்லாத வாக்கியமே கிடையாது.

பயனிலை

கண்ணன் கண்டான் - இவ் வாக்கியத்திலும் இரண்டு சொற்கள் இருக்கின்றன. கண்ணன் என்பது பெயர்ச்சொல். அவன் செய்யும் தொழிலோ காணல் ஆகவே 'கண்டான்' என்பது பயனிலை. எழுவயின் தொழிலைக் காட்டுஞ் சொல்லே பயனிலையாம்."

குறிப்பு: பயனிலை இல்லையென்றால் அது வாக்கியம் இல்லை. சில சமயங்களில் எழுவாய் மறைந்து