உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 5.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3


றன. அவற்றால் சுவர் உண்டாவதுபோல எழுத்துக்களால் சொற்கள் அமைகின்றன. சுவர்களை மனையலங்கார விதியின்படி அமைப்பதுபோல சொற்களை யாப்பு நூலில் கூறியபடி வைக்க வேண்டும். வீடு போன்று பொருள் ஏற்படுகின்றது. வீட்டை அழகுபடுத்துவது போல பொருளையும் அழகு பட (அணி பெற) அமைக்க வேண்டும்.

"இலக்கணம், எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்று ஐந்து வகைப்படும்."

8. ஒலி எழுத்து, வரி எழுத்து.

நாம் நமது கருத்தை மற்றையோர்களுக்குச் சொற்களால் தெரிவிக்கின்றோம். தனித்தனிச் சொற்களாலும் அறிவிக்கின்றோம். வா, தீ, பை, போ என்பன போன்ற சொற்கள் தனியே நின்று பொருள் தந்தன. இவ்வாறு எல்லாச் சொற்களும் பொருள் தருவது இல்லை.

"அன்பே சிவம், நான் சென்றேன், நான் நாயைக் கண்டேன்."- இவ்வாறு பல சொற்களால் ஆகிய சொல்தொடரால் ஒரு கருத்து வெளியாகும்.

அன்பே கண்டேன் நான் நாயை சிவம் சென்றேன்- என்ற மேற்கூறிய சொற்களே தனித்து நின்றும் கருத்துத் தோன்றவில்லை. ஆகவே கருத்தை விளக்குவது சொல் தொடரே. அச்சொற்றொடருக்குக் காரணமாய் இருப்பது சொல்.