உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 5.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4


'அன்பே கடவுள்' - எ ன் ற சொற்றொடரில் இரண்டு சொற்கள் இருக்கின்றன. அவற்றுள் 'அன்பே' எ ன் ப து ஒரு சொல். இச்சொல் 'அ +ன்+ப் + ஏ’ என்ற நான்கு ஒலிகளால் அமைந் திருக்கிறது. இவ்வொலிகளே அச்சொல் உண்டாவதற்குக் காரணமாய் இருக்கின்றன. இவையே எழுத்து என்று பெயர் பெறும்.

"சொற்கள் உண்டாவதற்கு முதற் காரணமாய் இருக்கும் ஒலியே எழுத்தாம்"

தும்மல், இருமல், கனைத்தல் முதலியவைகள் ஏற்படும் பொழுது ஒலி ஏற்படுகிறது. அவ்வொலி சொற்கள் உண்டாவதற்குக் காரணமாய் இல்லை. ஆகவே அவ்வொலி எழுத்தாகாது.

எழுத்துக்கள் முதன் முதலில் ஒலி வடிவிலே இருந்தன. அப்பொழுது ஒருவரின் கருத்தை மற்றொருவர் நேரிலேயே தெரிந்து கொண்டனர். துரத்தில் இருப்பவர்கட்குச் செய்தி அறிவிக்க முடியாத நிலையில் இருந்தது. அப்பொழுது ஒலி வடிவில் உள்ள எழுத்திற்கு வரி வடிவு கொடுத்தனர். இவ்வாறு எழுத்துக்கள் ஒலி வடிவு, வரி வடிவு என்ற இரண்டு உருவத்தைக் கொண்டன. "வாயால் பேசப் பட்டுக் காதால் கேட்கப் படுவது ஒலி எழுத்தாம். கையால் வரி வரியாக எழுதப் பட்டுக் கண்ணால் பார்க்கப்படுவது வரி எழுத்தாம்."

4. எழுத்து வகைகள் இரண்டு.

நாம் கடைக்குப் போனால் பல பேர்கள் அங்கு வேலை செய்வதைப் பார்க்கிறோம். அவர்களுள்