உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மான விஜயம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xviii

அமைவுடைத்தாகும். இங்கினங் கோடலே மகாமகோபாத்தியாய சாமிய்ை தையர் அவர்களுக்கும் கருத்தென்பதைப் புறநானூற்றுப் பாடினேர் வரலாற்: அக் குறிப்பா லறியலாம். பொய்கை என்பது தமிழ் காட்டு மேற்றிசைக் கண் ணதோரூர் என்றும்அங்குப் பிறந்தமையால் இவர்க்குப் பொய்கையார் తాణాత பெயர் வாய்ந்ததென்றும் கூறுவர். இவரே தாம்பாடிய கோதைமர்பில் கோதையாலும்,' என்ற புறப்பாட்டுள், கண்ணு றும்மே கானலக் தொண்; யஃதெம் மூரே என்று கூறியது அவர் சோனேயடைந்த பின்னர் அவர் தாம் வசித்துவந்த தொண்டியைத் தமது ஊராகக் கூறினரென்று கோடலேபொருள் துவதாகும். இவருடைய காலம் சோழன் செங்களுன் காலமே.

சோழன் செங்களுன் உறையூரில் அாசபுரிந்த சோழருளொருவன். இவன் பிறக்கவேண்டிய அமயங் கழித்துப்பிறந்தமையால் சிவந்த கண்களை யுடையணுயினன் என்றும், அதனுல் அவனுக்குச் செங்களுனெனப் பெயர் வாய்ந்ததெனவும் புராணம் கூறும். இவனேக் கோச்செங்கட்சோழன் என்றுங் கூறுப. அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவன். இவன் எண்டோளி சற்கு எழுபதுமாடங் கட்டியவனுகக் கூறப்படுதலின் சிவபத்தியிற் சிறந்தவன் என்பது புலப்படும். திருமங்கை மன்னன் பெரிய திருமொழியில் இவன் சிறப்பித்துக் கூறப்பட்டிருத்தலின் திருமால் பத்தியிலுஞ் சிறந்தவன் என்ப தற்குத் தடையில்லை. கன்னிலம், அம்பர் முதலானதலங்களில் இவன் கோயில் எடுப்பித்த விவரத்தைத் தேவாரப்பதிகங்கள் கூறுகின்றன. இவன், சோமான், பொய்கையார்ஆகிய இருவர் மாட்டுமிழைத்த தீமைக்குக் கழுவாயா கப் பலதலங்களிலும் தேவகுல மெடுப்பித்தான் என்று இந்நாடகவாசிரியர் தமது கதைக்கு ஏற்பப் பொருத்திக்கொண்டது மிகவும் பாராட்டற்பாலது. இவன் கழுமலப் போரிற் கணக்காலிரும் பொறையை வென்றகப்படுத்திய செய்தியை,

நன்னன் எற்றை நறும்பூண் அத்தி துன்னருங் கடுந்திறற் கங்கன் கட்டி பொன்னணி வல்விற் புன்றுறை யென்ருங் கன்றவர் குழிஇய அளப்பருங் கட்ர்ேப் பருந்துபடப் பண்ணிப் பழையன் பட்டெனக் கண்டது கோனு னுகித் திண்டேர்க் கணேய னகப்படக் கழுமலர் தந்த பினேயலங் கண்ணிப் பெரும்பூட் சென்னி," என்று அகநானூற்றுச் செய்யுட்பகுதி விளக்குகின்றது.இ தன்கண் கழு மலப் போருக்குக் காரணமும் ஒருவாறு கூறப்பட்டுள்ளது.

சோனது படைத் தலைவர்களாகிய நன்னன் முதலியோருடன் சோழன் படைத்தல்வனகிய பழையன் பொருது அவர்களே வென்று அவர்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மான_விஜயம்.pdf/17&oldid=656083" இலிருந்து மீள்விக்கப்பட்டது