உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாயூரம் வேதநாயகம் பிள்ளை.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Żë மாயூரம் வேதநாயகம் பிள்ளை

"ஒரு நாள் ஆசிரியர் என்னை நோக்கி, ஆசான் மாணவனுக்கு எவ்வளவு போதிக்கலாமோ அவ்வளவு நான் உனக்குக் கற்பித்து விட்டேன். நீயே இனி படிக்க வேண்டும். கல்வியில் நிரம்ப வண்டும். ஆசானுடைய போதகம் முடிந்தபின்பு, கல்வியும் முடிந்து போனதாகச் சிலர் நினைக்கிறார்கள். அப்படி எண்ணுவது

. سانس

உண்மையை உரைக்க வேண்டுமானால், பாட சாலையை விட்ட பிற்பாடுதான்் படிப்பு ஆரம்பிக்கின்றது. "பள்ளிக்கணக்குப் புள்ளிக்கு உதவா" என்பதுபோல, பள்ளிக்கூடத்திலே கற்கிற கல்வியை வளர்க்காமல் போனால், அக் கல்வி ஒன்றுக்கும் பயன்படாது.

பாடசாலையிலே கற்கின்ற கல்வி அஸ்திவாரமாகவும், பள்ளிவிட்ட பிறகு தான்ே படிக்கிற படிப்பு, மேற்கட்டிடத்துக்குச் சமானமாயும் இருக்கின்றது. ஒருருக்குப் போகிற வழியைக் காட்டுவதுபோல, கல்வி கற்க வேண்டிய வழியை மட்டும் ஆசிரியர் போதிப்பதோ அல்லது கல்வியை முழுமையாய்க் கற்பிப்பதோ சாத்தியமல்ல.

பூட்டி வைத்திருக்கிற பொக்கிஷத்துக்கு திறவுகோல் கொடுப்பது போல, எந்தப் புத்தகத்தை வாசித்தாலும், பொருள் தரிந்து கொள்ளும்படியான ஞானத்தை உனக்குப் போதித்து, பித்தியா பொக்கிசத்தின் திற்வுகோலை உன் கையிலே கொடுத்துவிட்டேன்.

દકો

இனிமேல், நீ உன்னுடைய முய சியால் அதைத் திறந்து, அனுபவிக்க வேண்டுமே அல்லாது, நா செய்யத்தக்கது ஒன்றுமே இல்லை. அரும்பதங்களுக்கு அருத்தம் தரிய வேண்டுமானால், அகராதி, நிகண்டுகள் இருக்கின்றன