உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாயூரம் வேதநாயகம் பிள்ளை.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 27

சொல்லச் சொல்ல, சம்பளப் பணியாளர் அதை எழுதிக் கொண்டே வருவார். அந்த நூல்கள் தமிழில் வெளிவர அவ்வளவு முயற்சிகளை மேற்கொண்டு வேதநாயகர் பணியாற்றினார்.

மாவட்ட நீதி மன்றத்திலே குற்ற வழக்குகள் விசாரணை நடக்கும் போது, வேதநாயகர் நீதிபதி அருகே அமர்ந்து, காசியார் பத்து வாக்குக் Kasiya Pathuwak கொடுப்பது வழக்கமாகும். முஸ்லிம் ஆட்சி நடை பெறும் போது, அதே காசியார்கள் நீதி வழங்கிடும் முறை இருந்தது. முஸ்லிம் ஆட்சி இங்கீஷ்காரர் ஆட்சிக்குள் வந்தபோது, முன்பு நடந்த முஸ்லிம் ஆட்சிகளின் வழக்கம் ப்ோலவே, ஆங்கில நீதி பதிகள் அருகே காசியார்கள் அமர்ந்து நியாய வழக்கிலே உதவி செய்வார்கள்.

ஆங்கில நீதிபதியினுடைய கருத்துடன் காசியார் கருத்து மாறுபட்டால், அது போன்ற வழக்குகளை ஆங்கில மொழியில் பெயர்த்து சதர்ன் கோர்ட்டார் முடிவுக்கு அதை அனுப்பி விடுவார்கள். இது அப்போதிருந்த நீதிமன்ற முறைமையாகும்.

இவ்வாறு நடந்த பணிகளில் வேத நாயகம் ஓய்வு ஒழிச்சலின்றி ஈடுபட்டபோது,இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையிலே கருத்து வேறுபாடுகள் உருவானது. அதனால், பல வழக்குகள் மாவட்ட நீதிமன்றத்திலேயே அப்போது நடந்து வந்தன.

பல வழக்குகளில் நீதிபதியின் கருத்துக்கு முரணாகக் காசியார் கருத்து இருந்தது. அதனால், அவற்றை எல்லாம் ஆங்கிலத்திலே மொழிபெயர்த்து நீதிபதியின் ஒப்புதலுக்கு முன்வைத்தார் வேதநாயகம்.

அப்போது நீதிபதியாக இருந்தவர் மேஸ்தர் டேவிட்சன். அவர் மாறுதலாகி வேறு இடத்துக்குப் போய்விட்டார். அதனால், ஒப்புதலுக்காக வேதநாயகர் வைத்த மொழி பெயர்ப்புக்களைப் பார்வையிட அப்போது அவரால் இயலவில்லை. நிதான்மாக