உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாயூரம் வேதநாயகம் பிள்ளை.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. மாயூரம் கோர்ட்டுக்கே எல்லா வழக்குகளும் மாறின

கி.பி. 1856 ஆம் ஆண்டு முன்சிஃப் வேலை இடம் ஒனறு காலியானது. அதற்கு அறுபது பேர் மனுப்போட்டார்கள். மனு செய்தவர்களில் ஒருவர் வேதநாயகர், மற்றவர் ஜஸ்டிஸ் முத்துசாமி ஐயர். மூன்றமவர் திவான் ரகுநாதராவ் இவர்கள் மூவரும் முக்கியமானவர்கள்.

முன்சிஃப் பணிக்கு வந்த விண்ணப்பங்கள் அறுபதையும் பரிசோதித்து தேர்வு புரியும் பணியை கும்பகோணம் மாவட்ட நீதிபதி பிச்சாம்பு என்பவரிடம் ஆங்கில ஆட்சி ஒப்படைத்தது. அந்தத் தேர்விலே அவர் மேற்கண்ட மூவரை மட்டுமே தேர்வு செய்தார். அவர்களிலே ஒருவராக, முதன்மையானராகத் தேர்வு செய்யப்பட்டார் வேதநாயகர்

மற்ற இருவர் யார் தெரியுமா? பிற்காலத்திலே சென்னை உயர்நீதி மன்ற நீதிபதியாக இருந்த ஜஸ்டிஸ் முத்துசாமி ஐயர். மற்றவர். திவான்பகதுர் ரகுநாதராவ். இந்த ரகுநாதராவ் என்பவர், 1885 ஆம் ஆண்டில் காங்கிரஸ் பேரியக்கத்தைப் பூனா நகரிலே தோற்றுவித்த ஆலன் ஆக்டேவியன் ஹியூம் என்ற ஐரிஷ் நாட்டு வெள்ளையரின் நெருங்கிய நண்பர். இந்த திவான் பகதுர் ரகுநாத ராவ்தான்் காங்கிரஸ் பேரியக்கம் தோற்றுவிக்கப்பட சென்னை யிலே தனது பங்களாவிலே இடம் கொடுத்து இயக்கம் ஆரம்பமாவதற்கு ஹியூம் துரைக்குப் பக்கபலமாக, வெள்ளை ஆட்சிக்கு எதிராக நின்று செயல் பட்ட அஞ்சா நெஞ்சர்.