உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாயூரம் வேதநாயகம் பிள்ளை.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 4}

அவர்களுக்குக் கோபம் வரக்கூடாது. வருமானால், அது நியாயத்தின் அறிவைத் தடைப்படுத்தும்.

வஞ்சகர் மனதை ஊடுருவிப் பார்க்கும் ஆற்றல் நீதிபதிகளுக்கு நிச்சயமாக இருக்கவேண்டும். என்ன உண்மைகளை நீதிபதிகள் அறிகின்றார்களோ, அதை எவருக்கும் அஞ்சாது, தயை, தாட்சண்யம் பாராது. தயங்காது வெளியிடும் மன உரம் வேண்டும் வாதிகள் எப்படிப் பட்டவர்கள், பிரதிவாதிகள் எத்தகையவர்கள், அவரவர்களது வரலாறுகள் என்னென்ன என்பவற்றைப் பற்றியெல்லாம் எண்ணாமல், நினையாமல், வழக்கின் தன்மை என்ன என்பது ஒன்றையே, அதற்குரிய சாட்சிகள், சான்றுகள் முதலியவைகளால் ஆராய்ந்து முடிவு செய்வது நீதிபதிகளின் கடமையாகும்.

உண்மையாக நடந்த ஒரு சம்பவத்தை அல்லது நிகழ்ச்சியை எடுத்துக் கூறும் திராணியோ, தெம்போ, லமோ, வலிவோ இல்லாதவரை தாமே அந்த உண்மைகளை உணர்ந்து பாதுகாத்தல் அவர்பொறுப்பு. வஞ்சகத்தை வெளிப்படுத்தித் தக்கவாறு தண்டனை விதிக்க நீதிபதிகள் தயங்கக் கூடாது.

அறம் சார்ந்த நெறிகளிலே இருந்து தவறக் கூடாது. பண ஆசை அல்லது பொருளாசை அவர்களுக்கு இருக்கக் கூடாது. நண்பர்கள், சுற்றத்தார்கள், பகைவர்கள், விரோதிகள், ஆகியவர்களது நிலைக்கேற்றவாறு நடுநிலை வகிக்கும் தகுதிபெற்றவ ராக அவர் இருக்க வேண்டும். குறிப்பாக, இந்தப் பண்புடைமையிலே அவர்கள் வைரம் பாய்ந்த மனம் பெற்றிருத்தல் வேண்டும்.

இவற்றிற்கெல்லாம் மேலாக, நீதிபதியிடம், கடவுள் பக்தி கனிந்திருத்தல் வேண்டும். அதனால், அறத்தைப் பின் பற்றுவதில் மன உறுதியும், மறத்தை ஒழிப்பதிலே துணிவும் உண்டாகும்.