என்.வி. கலைமணி 47
அவனைக் கண்டவுடனே சோடு போட்டுக் கொண்டிருப்ப வர்கள் அவைகளைக் கழற்றுகிற வேகத்தைப் பார்த்தால், அவனை அடிப்பதற்காகவே கழற்றுவதாகத் தோன்றும். ஆனால், அவர்கள் மரியாதைக்காகச் சோடுகளைக் கழற்றுகிறார்களே. அன்றி அடிப்பதற்கல்ல!
அவன் தெருவிலே நடந்து போகும் போது, தெரு முழுவதும் தனக்கே சொந்தம் போல அடைத்துக் கொண்டு கால் ஒரு பக்கம்; கை ஒரு பக்கம்; வேட்டி ஒரு பக்கமாக விறைத்துக் கொண்டு நடப்பான். அவன் நடக்கும்போது அவனுடைய சோடு அவன் கால்களிலே படீர் படீர் என்று அடித்துக் கொண்டு போகும். அவனை மட்டும் எல்லோரும் வணங்கவேண்டுமே தவிர, அவன் ஒருவரையும் வணங்குகிறதில்லை. இறுமாப்புடன் அவன் ஆகாசத்தைப் பார்த்துக் கொண்டு நடக்கிறதே அல்லாது, பூமியைப் பார்த்து நடக்கிறதில்லை.
அதிகாரத் தான்த்திலே அவன் இருக்கும் போதும், மக்கள் எல்லாரும் கைகட்டிக் கொண்டும், வேட்டிகளைத் தூக்கிக் கட்டிக் கொண்டும், தூரத்திலே நிற்க வேண்டுமே அல்லாது அவன் சமீபத்திலே ஒருவரும் நெருங்கக் கூடாது. கண்ணாலே ஒருவரையும் அவன் ஏறெடுத்துப் பார்க்கிறதில்லை. அவனுடைய வாயிலே வசவும் திட்டும் புறப்படுமே அல்லாது நல்ல வார்த்தைகள் வருவதில்லை. பேய்க்கு கள் வார்த்தது போல, அவனுடைய முகத்திலே எப்போதும் கோபம் கூத்தாடிக் கொண்டிருக்கும். பொறுமையாக அவன் ஒரு காரியத்தையும் விசாரிப்பதில்லை. அவனை யார் அதிகமாக வணங்கி முகத் துதி செய்கிறார்களோ, அவர்கள் பட்சம் தீர்ப்புக் கூறுகிறதேயன்றி, உண்மையைக் கண்டுபிடித்து அவன் தீர்மானிக்கிறதில்லை.