உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மார்டின் லூதரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

மார்ட்டின் லூதரின்

திருவள்ளுவர் பெருமான், சித்தார்த்தர், இயேசுநாதர், நபிகள் நாயகம், சாக்ரடீஸ், கன்பூசியஸ், ஆதிசங்கரர், இராமானுஜர், சித்தர்கள், காந்தியடிகள், கணியன் பூங்குன்றன், திருமூலர், அசோகன், மார்ட்டின் லூதர், கார்ல் மார்க்ஸ், ஆப்பிரகாம் லிங்கன், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, மற்றும் அறிவியல் வித்தகர்கள் போன்ற எண்ணற்ற மேதைகள் உள்ளார்கள்.

மேற்கண்டவர்கள் ஒவ்வொருவரும்-அவரவர் சிந்தனை வளம், திறன், உரனுக்கு ஏற்றபடி, உலகம் என்றும் அனுபவிக்கக்கூடிய புதிய புதிய அற்புதங்களைக் கண்டுபிடித்து, அனுபவித்து, நம்மையும் அனுபவிக்க வைத்துள்ளார்கள்.

இந்தச் சிந்தனைச் சிற்பிகளின் அறிவாற்றல்கள் என்னென்ன என்பதை விளக்குகின்ற நூலல்ல இது. ஓர் எடுத்துக்காட்டுக்காக மட்டுமே ஒரு குறிப்பு இது!அவ்வளவுதான்!

இந்த வழிகாட்டிகள் என்போர், என்னென்ன கண்டுபிடித்து உலகுக்கு வழிகாட்டியுள்ளார்கள் என்பது, ஓரளவு படித்த மக்கள் அறிவார்கள்!

வழிகாட்டிகளான மேற்கண்டவர்கல் கண்டுபிடித்த தத்துவத்தை உலக நாடுகள் ஒவ்வொன்றும் ஏற்று, அதற்கான கிளைமன்றங்கள் உருவாக்கி, உறுப்பினர்களைஉருவாக்கி, ஊர் பரப்புவதர்க்கு ஏற்றவாறு அந்தத் தத்துவத்திற்கு நிர்வாக உருவம் கொடுத்து அதனை வழிநடத்திச் செல்பவர்களை தலைவர்கள் என்று கூறலாம்!

எடுத்துக்காட்டாக, கிறித்துவ மதத்திற்கான தத்துவ மழைகளை அவ்வப்போது நாட்டு மக்களைக் கூட்டிவைத்து பொழிந்தவர் இயேசு பேருமான்!

ரோமன் கத்தோலிக்கம், பிராட்டஸ்டண்டு இயக்கம், பெந்தெகோஸ்தே, சி.எஸ்.ஐ., இ.என்.ஐ. இன்னும் எத்-