உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முதுமைக் காலத் தொல்லை பூச்சிகளினால் ஏற்படும் தொல்லை நீங்கி நலமுடன் வாழலாம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொல்லை நீங்கி நலமுடன் வாழலாம்

5


மனிதர்கள் எண்ணத்தில் பாம்பைப் பற்றியும் அதன் கொடுமையான விஷங்களைப் பற்றியும் தெளிவாகத் தெரியும் ஆபத்துக்களை அறியும் மனத் தெளிவும் தெரிய ஆரம்பித்தது.

முன் காலத்தில் இதே பாம்பு வகைகளை நமது மக்கள் தெய்வ அம்சம் உடையதாக நினைத்து, அந்தப் பாம்புகளை வழிபட்டும் வந்தார்கள்.

பாம்பை நாகம் என்ற பெயராலும் தமிழ் நாட்டு மக்கள் அழைத்தார்கள். அந்தப் பாம்பு இனத்துக்கு நாகர் இனம் என்றும் கூறினார்கள். நாகலோகம் என்ற ஓர் உலகம் இருப்பதாகவும் நம்பினார்கள்.

அந்த நாகலோகத்திலே வாழ்பவர்களை நாகர்கள் என்றும், அவர்கள் எல்லாம் கடவுள் தொண்டர்கள் என்றும் நினைத்துப் போற்றி வந்தார்கள். அவர்களால்தான் நாகர் என்ற ஒரு நாகரிகமும் தோன்றியதாக நம்பினார்கள்.

இன்றைக்கும் நமது தமிழ் நாட்டில் நாகர்கள் வாழ்ந்ததாகப் பல ஊர்களுக்குப் பெயர்கள் கூட இருக்கின்றன.

நாகர்கள் வாழ்ந்த ஊர்களான நாகர்கோவில் என்ற ஊர் கன்னியாகுமரி மாவட்டத்திலே இன்றும் உள்ளது.

நாகப்பட்டினம், நாகூர், என்ற தமிழ் நாட்டில் உள்ள ஊர்களும், வட நாட்டில் நாகபுரி என்ற மாவட்டமும், நாகாலந்து என்ற ஒரு மாநிலமும் நாகர்கள் இனம் வாழ்ந்த இடங்களாக மதிக்கப்படுகின்றன.

அந்த நாகர்களின் ராஜனுக்கு நாகராஜன் என்றும், அவனுடைய மனைவிக்கு நாகாத்தாள் என்றும் தெய்வ தேவதைப் பெயர்களால் அழைக்கப்பட்டிருப்பதாகத் தெரிகின்றது.