25
நாம் சர்வசாதாரணமாகக் காண முடிகிறது. என்றாலும் இங்கே இப்போது நான் ஒரு ஊரில்-இல்லை ஒரே யிடத்தில் - இரண்டு பைத்தியக்காரர்களா? என்று வியக்கத் தான் வேண்டியிருக்கிறது. குமாரி பத்மா அவர்கள்தான் புதுமை மோகத்திலே, இளமை உற்சாகத்திலே, கற்பனைச் செறிவிலே, காவிய உணர்வுத் குமிழ்விடுதலினாலே, கவிதை உள்ளக் குறுகுறுப்பிலே நடை முறைக்கு ஒவ்வாத ஒரு பைத்தியக்காரத் தனத்தை வைத்து விளையாடுகிறார்கள் என்று எண்ணினோம், சகோதரிக்கு அது வெறும் பொம்மை விளையாட்டு சிறு பெண் சிற்றில் கட்டி விளையாடுவதைப் போல, உணர்வும் உள்ளமும் உற்ற பருவமெய்தினால் தோழிபத்மா அவர்கள் இப்பேச்சைக் காற்றிலே பறக்க விட்டு நலங்கும், லாலியும் பாடத் துணிவார்கள் ; பிறகு ஆராரோ ஆரிராரோ.......தாலே தாலேலோ.....கண்ணே நீ யுறங்கு கண்மணியே நீ யுறங்கு என்று தாலாட்டுப் பாடவும் தயாராகி விடுவார்கள் என எண்ணினோம், ஆனால், நம்ம ரகுராமன்-இதுவரை மெளனச்சாமியாக இருந்த நம்மதோழர் ரகுராமன். இப்படி நாடக உத்திகாட்டி, இந்த இடத்திலே துப்பாக்கிச் சிரிப்பொன்றை வெடிக்கவிட்டார் பத்மாவை எதிர்த்துப் பேசவந்தஜாலிபிரதர், அவ்வளவுதான். அவருக்கு பிரமாதமான வெற்றி. ஆயிரமாயிரம் அப்பளங்களை அடித்துநொறுக்கி ஆரவாரிப்பதுபோல, கைகள் சடசடத்துக் கொட்டின. மேஜைகள் மத்தளங்களாயின. பத்மா 'ப்ரூட்ஸ்! மிருகங்கள்!' என்று முனங்கி வெளியேறினாள்.
எனினும் அவள் உள்ளத்திலே ரகுராமன் இனிய நிழலாய் நின்றான். அவனைக்கண்டு பேச வேண்டும் என எண்ணினாள். "அவர் ரொம்ப நல்லவர். ஆயிரத்தில் ஒரு மனிதர் .இவ்வளவு அமைதியாக அடக்கமாக அழகாக விளக்கிப் பேசினார்" என்று