உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முத்துக் குளிப்பு.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33

முடியும். இதற்கு சித்தர் பாடல்களும், பழம் பாடல்கள் பலவும் சாட்சி என்கிறது என் மனம்.

சித்தர்கள் முறையாகத் தமிழ் பயின்று பாடல் எழுதத் தொடங்கியவர்களாகவும் இருந்திருக்கலாம். * கண்டது கற்றுப் பண்டிதர் ஆன மேதைகளாகவும் இருந்திருக்கலாம். உண்மைத் தெளிவும் உள்ளத் துடிப்பும் கொண்டு பாடியவர்களாகவும் இருந்திருக் <ā69;sis).

இது எப்படி இருந்திருப்பினும், அவர்களில் அநேகர் பாடல்களில் நயம் இருக்கிறது; உள்ளத்தின் உண்மை ஒளி வாக்கிலே நாதமிடுவதை உணர முடிகிறது. பிற்காலக் கவிகளான பாரதியாரும் யோகியாரும் சித்தர்களின் பாடல்களால் வசீகரிக்கப் பட்டிருக்க வேண்டும் என்பதற்கு அவர்களது கவிதை களே சான்று கூறும்.

冰 岑

விநோத ரச மஞ்சரி ' எனும் புத்தகத்தின் ஆசிரியரான வீராசாமி செட்டியார் ஒரு ரசமான ஆசாமிதான் ! இதற்கு அவர் எழுதியுள்ள கட்டுரை களே சாட்சி.

கம்பர், ஒட்டக்கூத்தர், புகழேந்தி, காளமேகம், காளிதாசன் முதலியோரது வாழ்க்கையைப்பற்றி அவர் விரிவான கட்டுரைகள் எழுதியிருக்கிருர், கம்பர் வாழ்ந்தது, ராமாயணத்தை அரங்கேற்ற அரும்பாடு ப ட் ட து முதலியவைகளைப்பற்றி எழுதும்போது, செட்டியார், தாமே கூட இருந்து பார்த்து சிப்போர்ட் பண்ணுவதுபோல, மிக விரிவாகவும் விளக்கமாகவும் அளந்து வைத்திருக்கிருர். இஷ்டம் போல் அடிச்சு விடுதல் என்கிற உத்தி செட்டியாருக்கு வெகுவாகக் கைவந்த சரக்கு ! -

§