பக்கம்:முருகன் அந்தாதி.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

31


காடிலி பேரும் குறியு
மிலிதனை நம்பலர்க்குப்
பாடிலி கூடிலி வீடிலி
ஈடிலி பண்புமிலி
வாடிவி தண்மரு தாசலத்
தோங்கறு மாமுகனே.
(74)

முகமன் உரைத்து முறுவல்செய்
தேயன்பர் முன்வணங்கி
அகமன்னு மன்பின் உபசாரம்
செய்தவர்க் காமுணவு.
தகமுன்னி யீயுங் தகையருள்
வாய்செந் தமிழ்க்கரசே
சுகமன்னு சோலே மருதா
சலத்துறை தூயவனே.
(75)

தூயவன் பர்க்குத் தொழும்புசெய்
யாமல் துரிசகன்று
மேயவன் பாலுனேப் பூசிப்ப
தின்றி விழற்கிறைத்துப்


74. கிழமை இலி-உறவில்லாதவன் பகைவன். காடு இலி - நாடு இல்லாதவன். குறி-அடையாளம்; உருவமும் ஆம். கம்பலர்க்கு-கம்பாதவர்களுக்கு. பாடுஇலி-தோன்றுதல் இல்லா தவன்; பெருமை இல்லாதவன் என்பதும் பொருந்தும். கூடிலி,தேகம் இல்லாதவன். வீடு இலி-இல்லம் இல்லாதவன். ஈடு இலி-ஒப்பு இல்லாதவன். வாடிலி-வாட்டம் இல்லாதவன்.

75. அகம்-மனத்தில் முன்னி.எண்ணி, தகைஇயல்பு: தகுதியென்பதும் பொருந்தும், சுகம்-கிளி.