பக்கம்:முருகன் அந்தாதி.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

33

பவனைத் திருத்தந்தை யென்னும்

பிரானைப் பவானிதரு

மவனைக் கலியுக தெய்வத்தை

வேளை அருட்கடலை

நவனைக் குளிர்மரு தாசல

ஏந்தலை நம்பினவர்

தவம்மெய்த் தவம்மற்றை யோர்முனைந்

தேசெய் தவமவமே. (79)


அவமாய வாழ்வை யகற்றி

அடிமையென் றாட்படுத்தித்

தவமீ தெனவெனக் காட்டித்

தருக்கைத் தவிர்த்தொழித்தான்

சிவமே தொழுங்குரு கொங்கில்

மருதத் திருமலையிற்

பவமேற லின்றி யருள்செயும்

வேற்கைப் பராபரனே. (80)


பரனார் கிரியும் அலைவாயும்

தென்பழ னிப்பதியும்

வரனாரு மேரக முங்குன்றம்

யாவும் வனமலேயும்

திரனார ஆறு படைவீ

டெனக்கொளுங் தேசிகனைக்

79. பவன்-சிவபெருமான். பவானி-உமாதேவி. நவனை -புதுமையுடையவனே. ஏக்தலை-தலைவனை. அவம்-வீண்.

80. பவம் ஏறல் இன்றி-பாவம் ஓங்காமல்; பிறவியை அடையாதபடி எனலும் ஆம். 3