பக்கம்:முருகன் அந்தாதி.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

37

விளக்குக்கும் செங்கதி ரோனுக்கும்
வான வியன்மதிக்கும்
ஒளிக்க லறியா இருளென்
மனத்துள் உறைந்ததுகாண்
அளப்பரி தாகிய ஞானவை
வேல்கொண் டதையொழிப்பாய்
துளக்கறு வோய்மருதாசலம்
மேய சுடர்க் கொழுந்தே. (90)

கொழுந்தென் நின்றுவிண் ணோரையந்
நாள்காத்த கோமகன்நீ
எழுந்துய ராலினைந் தேயடி
யேன்கிற்கும் இந்நிலையில்
அழுந்து படாமல் அருள்செயல்
நிற்கோ ரருஞ்செயலோ
தொழுந்தவர் சூழ்மரு தாசலம்
மேவிய தொன்மையனே, (91)

தொன்மைப் பொருளுக்குத் தொன்மைப்
பொருளாய்த் துலங்குபல
நன்மைப் புதுமைப் பொருட்கும்
புதிய நயப்பொருளாய்
இன்மைப் பொருளாகி உண்மைப்
பொருளாய் இலகுகுகன்
பன்மை யறுக்க மருதா
சலத்திற் படர்ந்தனனே. (92)


90. துளக்கு-சலனம். 91. இனைந்தே-வருந்தி, அழுந்துபடாமல் ஆறாமல்:தவர். தவஞ்செய்யும் முனிவர்.