பக்கம்:முருகன் அந்தாதி.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

படரும் கொடியொன்று கொள்கொம்
பிலாமற் படருழந்தே
இடரொன்றி நின்ற அதுபோல்
இருக்குமிவ் வேழையின்பால்
கடலொன்று தண்ணரு ளிற்றுளி
ஈந்து கவலையற்றுக்
கிடவென்று சொல்லாப் மருதா
சலத்திற் கெழுமணியே. (93)

மணியே மணியில் ஒளியே
ஒளியில் மலிதெளிவே
அணியேர் மயிலில் வருஞ்சுட
ரேஎன ஆண்டவனே
தனியேர் பொழில்மரு தாசலம்
நின்ற தனித்தெய்வமே
பிணியேய் பிறவிக் கடலலை
யாதெனைப் பேணுவையே. (94)

பேணும் மனைவி தனயரென்
றெண்ணிப் பெரிதழிந்தேன்
வீனில் உழன்ற மனத்தில்
உனேவைத்து மேனிலையைக்
காணும் நெறியறி யேனுனேப்
பற்றிக் கதியடைய
வேணும் வழிசொல் மருதா
சலத்தை விழைந்தவனே. (95)


93.படர் உழந்து- அடைந்து.

94. தணி-குளிர்ச்சி.

95. தனயர்-புதல்வர்.