உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மூட்டம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கெ.சமுத்திரம் قy:Lم/14 திவான் உஷாரானார். பாய் பாய் என்று சொல்லும் இந்த ராமலிங்கம் அண்ணாச்சி' என்ற அர்த்தத்தில் காக்கா என்ற வார்த்தையை போட்டுவிட்டார் என்றால், ஏதோ ஒரு சமாச்சாரத்திற்கு அவர் காக்கா பிடிப்பதாகத்தான் இருக்கும். அவரை 'சொல்லு என்பது மாதிரி திவான் பார்த்தபோது, ராமலிங்கம் தலையைச் சொறிந்தபடி பேசினார். 'கட்டுப்படியாகல காக்கா... என்ன மட்டும் நீங்க விட்டால், இது வரைக்கும் செலவழிச்சமூணு லட்ச ரூபாயும் தொலையட்டும்னு ஒடிப்போய்டுவேன். நல்ல காரியமாச் சேன்னு மசூதியோட முதல் மாடியைக் கட்டுறதுக்கு சம்மதிச் சேன். ஆனாலும் இரும்புக்கும், சிமிண்டுக்கும், அதோ கூலி அதிகமா கேட்கிறாங்களே அந்தக் குடிகாரப் பயலுக, அவங்களுக்குத் தெரியுதா என்ன? ஏதோ என்னை, கையக் கடிக்காமலேயாவது நீங்க பாத்துக்கணும். திவான் முகமது, ஆசாமி எவ்வளவு செலவழித்திருப்பார் என்பதைக் கண்டுபிடிப்பதற்காக அந்த மொக்கை மாடியை கண்களால் ஒரு குத்துமதிப்பீடு செய்வது போல் பார்த்தார். ஒரு லட்ச ரூபாய்கூட செலவழித்திருக்க மாட்டான். அவன் சொல்றதுல மூன்றில் இரண்டு பொய். காண்ட்ராக்டர் மீண்டும் புலம்பினார். 'உங்களையும் கவனிச்சுக்கிறேன் காக்கா. நான் என்னமோ உங்களைக் கவனிக்க மாட்டேன் என்கிற மாதிரி பார்க்கி lங்களே. போங்க காக்கா. ' திவான் முகமது, இப்போது ராமலிங்கத்தை காக்கா மாதிரியே சாய்த்துப் பார்த்தார். இவன் தம்பியாகப் பிறக்கவில்லை யென்றாலும், தம்பி மாதிரிதான். ஆனாலும், பங்காளி என்று வரும்போது அண்ணன், எப்படி தம்பியைப் பார்ப்பானோ அப்படியே ராமலிங்கத்தைப் பார்த்தபடி பட்டும்படாமலும் பதிலளித்தார். ஆகட்டும் பார்க்கலாம். '

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூட்டம்.pdf/16&oldid=882366" இலிருந்து மீள்விக்கப்பட்டது