17/மூட்டம் சுெ.சமுத்திரம் நடக்கும்போதும் பாக்கான். பஸ்ஸுல போகும்போதும் பக்கத்துல இடிச்சுக்கிட்டு நிக்கறதுமாதிரி நிக்கான். இங்கேயும் பார்க்கிறவன் பார்க்கத்தான் செய்வான். அப்படியே பார்த்தாலும் அவன் மோசமா பார்க்கான்னு ஏன் நினைக் கணும். வீட்டுலயும் தெருவிலயும்தான் துணியால கோஷான்னா, மசூதியிலயும் இரும்பு கோஷாவா? திவான், பதிலுக்கு ஏதோ திருப்பிக் கொடுக்கப்போனார். அதற்குள் காதர் பாட்சா முத்துக்குமாரை விட்டுவிட்டு, அந்தப் பக்கமாக ஓடிவந்தான். முத்துக்குமாரோ அவனை அங்கே நிறுத்தி வைக்காமல், ஆயிஷாவை கண்ணடிக்க முடியாது என்று நினைத்தானோ, இல்லை பேச்சு சுவாராசியத்திற்காக அழைத்தானோ, தெரியவில்லைஅவனை ஓடிவந்து இழுத்தான். இதற்குள் அமீர், காதர்பாட்சாவைப் பார்த்து கையாட்டினார். அதில் ஏதோ ஒரு அர்த்தம் இருப்பதைப் புரிந்து கொண்ட காதரும் முத்துக்குமாரைச் செல்லமாக ஒரு தள்ளு தள்ளிவிட்டு அமீர் பக்கமாக ஓடி வந்து நின்று திவானைப் பார்த்துவிட்டு, அமீரைப் பார்த்து கண்ணடித்தான். இதைப் பார்த்துவிட்ட திவான் முகமது ஆத்திரம் தாங்காமல் முகத்தைப் புற்று போலாக்கி நாக்கை நாகப்பாம்பாய் வெளியே நீட்டியபடி, குறுக்கும் நெடுக்குமாய் நடந்தார். ராமலிங்கத்தைத் திட்டி அந்தத் திட்டை அவர்களுக்கு மறைமுகமாக கொடுக்கப் போனார். இதற்குள் பாங்குச் சத்தம் ஒலித்தது. அல்லாஹி...அக்பர்... அல்லாஹி...அக்பர் என்று அனைவருக்கும் பரிச்சயப்பட்ட வார்த்தைகளோடு, இஸ்லாமிய மக்களுக்கு மட்டுமே புரிந்த இன்னும் சில அரேபிய வார்த்தைகள்... உடனே தெருப் பக்கமாக மெத்தனமாய் நடந்து கொண்டிருந்தவர்கள் கூட இப்போது மசூதியை நோக்கி வேக வேகமாய் வந்து கொண்டிருந்தார்கள். அந்த மசூதிக்கும், அதன் வளாகத்தில் உள்ளடங்கிய .ே2.
பக்கம்:மூட்டம்.pdf/19
Appearance