19, عy قدستہ சுெ.சமுத்திரம் குலைப்பதாகாதா என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டான். இனிமேல் தொழுகைக்கு வரும்பொழுது இப்படிப்பட்ட எண்ணத்தோடு வருவதில்லை என்றும், அப்படி வந்தால் தொழுகை செய்வதில்லை என்றும் தீர்மானித்தான். அவன் மனதுக்குள் தொழுகையா? அபிராமியா? என்று நடுவர் இல்லாமலே ஒரு பட்டிமன்றம் நடைபெற்றது. பூமியை விரிப்பாகவும், வானத்தை விதானமாகவும் அமைத்த அல்லாவைத் தவிர மற்ற எண்ணம் அப்போதைக்கு வரக் கூடாது என்று மருந்தைக் குடிக்கும் போது குரங்கை நினைக்காதே என்று சொல்லப்பட்டவன் போல் அங்குமிங்குமாய்ப்பார்த்தபடியே நின்றான். பிறகு அபிராமி இந்நேரம் கோயிலை முடித்து விட்டு-(அவனுக்குத் தெரியும் அவள் கோயிலுக்கு போவது அவனைப் பூங்காவில் பார்க்கத்தான்.) பூங்காவில் காத்திருப்பதை நினைத்துக் கொண்டான். ஆகையால் அரைக்கிணறு தாண்டியதுபோல் இரு வேறுபட்ட மனநிலையில் தொழுகை செய்யக்கூடாது என்று நினைத்தவன் போல் திரும்பிக் கூடப்போக நினைத்தான். அப்போது அவன் தந்தை திவான் முகமது தொழுகைக் கூடத்திலிருந்து அவனைக் கண்களால் சுண்டியிழுக்க அவன் சண்டி மாடுமாதிரி தந்தையை நோக்கி நடந்தான். தொழுகைத் தளத்தில் வெளியே அந்நியர் இடுப்பில் அலைமோதிய குழந்தைகளின் அழுகைச் சத்தம்; அவர்களை அதட்டும் தாய்மைச் சத்தம்; காக்கை குருவிகளின் சீழ்க்கைச் சத்தம்; அத்தனை சத்தா சத்தங்களுக்கும் அப்பாற்பட்டவர் களாய் அனைவரும் வீராசனம் போட்டதுபோல் உட்கார்ந்திருந்தார்கள். மண்டியிட்டு உட்கார்ந்து கைகள் குவிய, வாய்கள் எதையோ ஒதிக் கொண்டிருக்க அசைவற்று இருந்தார்கள். தொழுகைக்கு என்றே நெய்யப்பட்ட முப்பது அடி நீள கோரைப்பாய்...அதன் நான்கடிப்பரப்புக்கு வேலிபோல் இன்னொரு பாய். இப்படி முப்பது முப்பத் தைந்து பாய்கள், அந்தத் தளத்தையே ஒரு பாய்த் தரையாக ஆக்கியிருந்தன. அத்தனை பேர் வாய்களிலும் ஒரு முணு
பக்கம்:மூட்டம்.pdf/21
Appearance