உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மூட்டம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுெ.சமுத்திரம் قليثيوم/24 சத்தங்கள். நட்சத்திரங்கள் தரையிறங்குவதுபோன்ற ஒளிக்கீறல்கள். கண்ணுக்குத் தெரிந்த டவுன் பக்கம் வாணவேடிக்கைகள் நடந்து கொண்டிருந்தன. நாலு தெருக் கள்தாண்டிய ஐந்தாவது இந்துத் தெருவில் கூட சின்னச்சின்ன வேட்டுச் சத்தங்கள். அந்த ஜகாத் கூட்டம், இப்போது காதரையும், அமீரையும் ஒதுக்கித் தள்ளியது. கோபத்தில் குப்புறத் தள்ளியது. நிலை குலைந்து விழுந்தவர்களை மிதிக்காமல், அவர்களுக்குச் சலுகை காட்டுவதுபோல் தாண்டிக் கொண்டே போனது. பின்புறமாய்த் திரும்பிய கூட்டத்தின் பக்கம் முகம் திருப்பி தங்களோடு சேரும்படி கைகளை ஆட்டியது. அந்தக் கரங்கள் மண்வெட்டி, கடப்பாரை சகிதமாகக் கைகளை ஆட்டின. தங்களோடு ஜகாத்துக்கு வராதவர்களை வெட்டிப் போடுவோம் என்பது மாதிரி ஆடின. பாதிப்பேர் பயந்துபோய், அந்தக் கூட்டத்தோடு சேர்ந்து கொண்டனர். கீழே கிடந்த அமீரும் பாட்சாவும் ஒருவரை ஒருவர் ஆதரவாகப் பிடித்துக்கொண்டே எழுந்தார்கள். குழந்தைகள் சுகம் தேடி வந்த பெண்களுக்கு ஏதாவது நடந்து விடக்கூடாதே என்பது போல் அவர்கள் விழுந்தடித்து ஓடி, அந்தப் பெண்கள் கூட்டத்திற்கு முன்பு கைகளை நீட்டி மனிதச் சங்கிலியாய் நின்ற போது, ஒரு மோட்டா சேலை கட்டிய பெண் அவர்களையே சாடினார். 'என்னா பாய் நீங்க? எங்கள ஏதாவது செய்வாங்கன்னு நீங்க நினைக்கிறதே தப்பில்லையா. டில்லியில யோ கில்லியிலயோ எந்தப் பய மசூதியை இடிச்சாலும் அவன் யாரு, நாம் யாரு. எங்களுக்கு நீங்கதான் அண்ணன்மாரு. நாங்கதான் உங்க அக்காதங்கச்சிங்க. எங்கள யாரும் ஒண்ணும் t_i GðõTGRT i DfILL-f7f51&5. ” அமீர் கண்களைத் துடைத்து, காதர் பாட்சாவின் தோள்பட்டையை தன் ஈரக் கைகளாலேயே தட்டிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூட்டம்.pdf/26&oldid=882386" இலிருந்து மீள்விக்கப்பட்டது