உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மூட்டம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுெ.சமுத்திரம் شستاyع / 29 தலைவர் என்ற வார்த்தையைக் கேட்டு பழனிவேல், ஆச்சரியமாகத் தலையை நிமிர்த்திய போது, சங்கரசுப்பு சிரிப்பும் கும்மாளமுமாய் சேதி சொன்னார். 'சும்மா சொல்லக் கூடாது. ராத்திரி இவங்க தலைமை யிலே நம்ம ஆட்கள் தூள் பரப்பிட்டாங்க... ' அபிராமி கோயிலுக்குள்ள நுழையப் போன துலுக்கனுகள சாத்து சாத்துன்னு சாத்திட் டாங்க...அபிராமி மட்டும் காளியம் மனாய் இருந்திருந் தால்...அவனுவள ஆடு, கோழி பலி கொடுக்கிற மாதிரி, அங்கேயே கொடுத்திருபானுக... பின்ன என்னங்க எத்தனை நாளைக்குத்தான் வளையல் போட்டு கிட்டு இருக்கது. நேத்து நம்ம ஆட்களோட ராஜ்ஜியந்தான்...ஒரே வாண வேடிக்கை...அணுகுண்டு மாதிரி வெடி வெடியாய் போட்டாங்க... அதுவும் மசூதிங்களுக்கு முன்னாலேயே போட்டாங்க...அப்புறமா பூரீராமர் படத்தை எடுத்துக்கிட்டு ஊர்வலம் போனாங்க... எல்லாரும் கடையை மூடிட் டாங்க...ஆனாலும் எனக்கு ஒரு வருத்தம். முஸ்லிம் பயலுக கடையை மூடுனா மூடுறான். நம்ம இந்துப் பயலுவ எதுக்காக மூடனும்? எப்படியோ நேத்து டவுனுல எல்லா சாய்பு பயலுகளும் பம்மிக் கிடந்தாங்க பழனிவேல் மோவாயைச் சொறிந்தபடியே பேசினார்; 'இவ்வளவு நடந்திருக்கு; எனக்குத் தெரியாமப் போச்சே... ஆனாலும் இந்துக்களும் கடையை மூடுனதுல தப்பில்ல... எரிற கல்லுக்கு இந்து, முஸ்லிம்னு தெரியுமா? இந்துக் கடையில முஸ்லிம் வேல பாக்கான்...அதோடு இந்து யாரு, முஸ்லிம் யாருன்னு கண்டு பிடிக்க முடியாது பாருங்க..." அந்த யூனிபாரக்காரர்கள் முகம் சளித்தார்கள். பழனி வேலையே ஒரு முஸ்லீமைப் பார்ப்பது போல பார்த்தார்கள். ஆனால் சங்கரசுப்பு சமாளித்தார். 'இதுக்குத்தான் இந்துக்களுக்கு ஒரு தனி அடையாளம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூட்டம்.pdf/31&oldid=882395" இலிருந்து மீள்விக்கப்பட்டது