உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மூட்டம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 /cyٹا۔اٹع கெ.சமுத்திரம் கிடையாது. எனக்குத் தெரியும் அந்தக் குல்லாக்காரன் ஜெயிக்கிறதுக்கும், அமைச்சர் ஆகுறதுக்கும் நீங்க என்ன பாடுபட்டிங்கன்னு. 'என்ன பாடுபட்டு என்ன பிரயோசனம்... கடைசில நன்றி கெட்டத்தனமா...' 'இதுக்குப் பெயர் நன்றி கெட்டத்தனமில்ல... இஸ்லாமுன்னு பேரு” 'இருக்கட்டும்..இருக்கட்டும்...ரெண்டு சாய்பு பயல்களும் எங்க போறாங்கன்னு பார்த்துடலாம்...' 'பாக்கனுமுன்னா, இப்பவே பாக்கணும். நம்ம மாவட்டத்துக்கு ஒரு இந்து மந்திரி வேணுமுன்னு நாம் போராடனும், அதற்கு நல்ல சந்தர்ப்பம் இப்ப வந்திருக்கு. பழனிவேல், எப்படி என்பது போல் புருவங்களை உயர்த்தினார். அவர் வாயைத் திறப்பதற்கு முன்பே யூனிபார நடுத்தர வயதுக்காரர் மார்தட்டிப் பேசினார். 'பாபர் மசூதியை இடிச்சதுக்கு, இஸ்லாமியர் கலாட்டா செய்ய ஆரம்பிச்சுட்டாங்க...அப்படியே அவங்க, கலாட்டாவை இடையில் விட்டாலும், நாம அவங்கள விடமுடியாதபடி கலாட்டா செய்யச் செய்யனும், நம்ம டவுனத் தாண்டி தேரிப்பக்கம் இருக்குது பாருங்க... மலைமேலே முருகன் கோவில்...அதுக்குக் கீழே மசூதி இருக்குது பாருங்க. அத நாம இடிச்சாகனும்...அப்ப பதுங்கிக் கிடக்கிற முஸ்லீமும் பாய்ஞ்சி வருவான்... பல தலை உருளும்...உருளட்டுமே...இப்ட் என்ன உருளாமலா இருக்குது...படுகளத்துல ஒப்பாரி எதுக்கு...இந்த கொலைக் கெல்லாம் மந்திரி அப்துல்லாதான் காரணமுன்னும், அவன் பதவி விலகணுமுன்னும் ஆர்ப்பாட்டம் செய்வோம்... அப்போ அவன் பதவி விலகித்தான் ஆகனும்...அதுக்குப் பிறகு திவான் முகமது காண்ட்ராக்டை கேன்சல் செய்றது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூட்டம்.pdf/36&oldid=882404" இலிருந்து மீள்விக்கப்பட்டது