சுெ.சமுத்திரம் ٹیسٹ cy/ 45. ப்ெரியப்பாக்கள், பெரியம்மாக்கள் இருப்பார்கள். நிச்சயமாக என்னைவிட, என்னை மாதிரியான இங்குள்ள எல்லா முஸ்லிம்களையும்விட சந்தேசமாத்தான் இருப்பாங்க. பேசாம தாத்தாவும் பாகிஸ்தானுக்கு போயிருக்கலாம். அப்படிப் போயிருந்தால் பிறந்த மண்ணிலேயே இப்படிப் பட்ட அந்நியத் தன்மை தந்திருக்க மாட்டார்கள். இப்படிப் பட்ட எல்லோரும் வழ்ங்கிக் கொடுக்கும் அந்நியத் தன்மை இருக்கிறதே, அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும். இந்த நாட்டில் ஒவ்வொரு முஸ்லீமும் ஒரு சராசரி இந்தியப் பெண்ணைப் போல; அவர்களுக்குப் பிறந்த வீடு முக்கிய மில்லை. புகுந்த வீடு புகுந்த வீடே. சம்சுதீன், ஒரு அன்னியன்போலவே அந்த அறைக்குள் நுழைந்தான். வழியில் ரஜினிகாந்த்- கமலஹாசன் மகாயுத் தத்தைப் பற்றிப் பேசிக் கொண்டு வந்த மாணவ மாணவியர் கூட பாபர் மசூதி இடிபட்டதற்கு சந்தோச விமர்சனம் செய்வதுபோலத் தோன்றியது. இது போதாது என்று, கல்லூரிக்கு வெளியே வாணவேடிக்கைகள். ராமபிரான் அப்போதுதான் உயிர்த்தெழுந்து வந்தது போன்ற கோஷங்கள்... i அந்த அறைக்குள், அபிராமி மட்டுமே இருந்தாள். மற்றவர்கள் வகுப்புக்களுக்குப் போயிருக்கலாம். அபிராபி, பின்கழுத்து தெரியாதபடி மூடித்திரை போட்டு, அதன் முனையைக் கைப்பிடிபோல் ஒரு சுருக்காக்கி இருந்தாள். வாசலையே வெறித்துப் பார்த்தவள். வழக்கம்போல் துள்ளிக் குதிக்கவில்லை. பொதுவாக இந்த மாதிரி சமயங்களில், அவன் அவளுக்குத் தெரியாமல் அவள் முடியை ஒரு இழுப்பு இழுத்து, அவள் கன்னங்களில் பள்ளங்களை ஏற்படுத்துகிறவன் ஆனால், இப்போது அவளை வெறுமனே பார்த்தான். அவளோ, அவனைப் பொய்க் கோபத்தோடு பார்ப்பவள், இப்போது அவனே பொய் என்பதுபோல் பார்த்தாள். அப்பா, சாடை மாடையாகச்
பக்கம்:மூட்டம்.pdf/47
Appearance