உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மூட்டம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுெ.சமுத்திரம் • ... ڈ۔ تیسc/47 'என்ன சம்சுதீன்! உங்க மனசிலே என்னதான் நினைப்பு? ரோம் எரியும் போது நீரோ பிடில் வாசிச்சகதை உன்கதை; எதுவும் தெரியாதது மாதிரி கேட்கிறியே பாபர் மசூதி இடிபட்டதற்கு ஒரு ஆறுதல் இல்ல. எங்க வீடே இடிஞ்சு போனதுமாதிரி நான் துடிக்கேன். உனக்கென்னடான்னா நான் உன்னைப் பார்க்க வராததுதான் பெரிசாத் தெரியுது.' 'என்ன சம்சுதீன்! நான் என்னமோ பாபர் மசூதியை இடிச்சது மாதிரிப் பேசுறீங்க." 'இப்போ கூட உனக்கு அந்த மசூதியை இடிச்சது உறுத்தலயே? நீயும் ஒரு சராசரி இந்துப் பெண் மாதிரி தான் நடந்துக்கிறே?" - 'டோன்ட் டாக் ஃபர்தர்! எனக்கு சுயமரியாதை இருக்கு! இந்துப் பெண் என்கிறதிலே பெருமைப்படுறேன்.' 'கடைசியிலே அல்லா உன்னைக் காட்டிக் கொடுத்துட்டார். 'ஏன் அபிராமி உங்களையும் காட்டிக் கொடுத்துட்டாள்" இருவரும், மனதுக்குள் அரும்பிய மதப்பற்றை, பாபர் மசூதி வழியாகவும் அபிராமி வழியாகவும் வெறுப்பாக மாற்றி அந்த வெறுப்பிலேயே தீக்குளித்தார்கள். அபிராமி அவனிடமிருந்து விலகிப்போய் எதிர் வரிசையில் உட்கார்ந்தாள். மனதை வசப்படுத்த அபிராமி பட்டர் எழுதிய அபிராம அந்தாதியை நெஞ்சுக்குள் ஒப்பித்துக் கொண்டிருந்தாள். சம்சுதீனோ மேஜையில் தலையைக் குப்புறப் போட்டு, இரண்டு கைகளையும் அதற்கு மேல் வளைத்துப் போட்டு அப்படியே கிடந்தான். முதல் பீரியட் இறந்து, இரண்டாவது பீரியட் பிறந்ததைக் காட்டும் வகையிலோ என்னவோ கல்லூரி மணி இரு வேறுவிதமாய் ஒலித்தபோது.... -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூட்டம்.pdf/49&oldid=882434" இலிருந்து மீள்விக்கப்பட்டது