உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மூட்டம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை அயோத்தி மசூதி தகர்ப்பிற்குப் பிறகு பத்திரி கைகளில் தலையங்கங்களும், வார இதழ்களில் சிறுகதைகளும், சினிமா உலகில் திரைப்படங்க ளும் வந்துள்ளன. ஆனால் எங்களுக்குத் தெரிந்து இதில் யார் பக்கம் நியாயம் உள்ளது என்பதை எந்த படைப்போ அல்லது திரைப்படமோ சுட்டிக் காட்டவில்லை. எலியும் பூனையும் மாதிரி சண்டை போடா தீர்கள் என்று பிடித்துத் தின்னும் பூனையையும், பிடிபடும் எலியையும் ஒரே தட்டில் வைத்துத்தான் சித்தரித்தன. ஆனால் சு. சமுத்திரம் இங்த நாவலில் யார் பக்கம் நியாயம் இருக்கிறது என் பதைத் திட்டவட்டமாக தெரிவித்து இருக்கிறார். வகுப்புக் கலவரம் என்று வரும் போது அதை சுயநல சக்திகள் எப்படி பயன்படுத்திக் கொள்கின் றன என்பதையும் சித்தரித்திருக்கிறார். நெல்லை மாவட்டத்தில் மேலப்பாளையம் என்ற கிராமத்தில் பெரும்பான்மையாக வாழும் முஸ்லிம் மக்கள் சுற்றிவளைக்கப்பட்ட கொடு மையை மையமாக வைத்து இந்த மூட்டத்தை உருவாக்கியிருக்கிறார். இந்த நாவல் பற்றி வாசகத் தோழர்கள் ஒரு வரி எழுதிப்போட்டால் நன்றியுடையோம். -ஏகலைவன் பதிப்பகம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூட்டம்.pdf/9&oldid=882517" இலிருந்து மீள்விக்கப்பட்டது