மனித இனம் நல்வாழ்வு வாழ, எண்ணற்ற மனித குல மேதைகள் தங்களது சொந்த வாழ்வினையே பலியாக்கிக் கொண்டார்கள். அத்தகைய மாமேதைகளில் ஒருவர் லியோ டால்ஸ்டாய் என்ற எழுத்துலகச் சிற்பி.
வளர்ந்து வரும் புதிய மக்கள் சமுதாயத்தில் ஒவ்வொருவரும் ‘நல்லவராக இருக்க வேண்டும்’ என்று மற்றவர்களுக்கு அறிவுரை கூறியவர் மட்டுமன்று டால்ஸ்டாய், என்னென்ன புத்திமதிகளை அவர் உலகுக்கு கூறினாரோ அதற்கேற்ப நல்லவராகவும் வாழ்ந்து காட்டிய நல்வழி நல்லறிஞராகவும் இருந்தவர்;
புகை மனிதனுக்குப் பகை என்று அவர் அறிவுரை கூறினார்! அதற்குத் தக்க, அபினி, கஞ்சா, சாராயம் மற்றும் பணக்காரர்களின் மதுபானபோதை வகைகள் முதலியவற்றால் வரும் தீமைகளை எடுத்துச் சொல்லி, அவற்றைத் தன் சொந்த வாழ்க்கையிலே அறவே கையாளாமல் நல்ல பழக்கங்களையே கடைப்பிடித்து வாழ்ந்து காட்டியவர் லியோ டால்ஸ்டாய்!
மேற்கண்ட பழக்க வழக்கங்கள் இல்லாதவரா டால்ஸ்டாய் என்றால், அவற்றின் சிகர போதையாளராக வாழ்ந்து கொண்டிருந்தவர்; ஆனால், இவற்றின் கேடுபாடுகளை