உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:லேசர் அறிவியல்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 ஒளிர் விளக்குக்கு 6%. ஆனால் இலேசரின் இயங்குதிறனோ 100%. மேலும் திண்ம இலேசர்களும் வளிஇலேசர்களும் இயங்குதிறனைக் குறைவாகப் பெற்றவையே. இதற்குரிய காரணங்களாவன: 1. இவற்றில் ஒளி ஆற்றல் குறிப்பிட்ட அளவு வெப்பமாக மாறுவதால், இயங்குதிறன் குறைகிறது. வளரும் தொழில் அறிவினைக் கொண்டு இதனைத்தடுக்கலாம். 2. இவற்றில் உண்டாகும் ஒளிக்கற்றையினைக் கட்டுப்படுத்துவது மிக் கடினம். இக்கட்டுப்பாடு இல்லை என்றால, செய்தித்தொடர்பு நடைபெறுவதற்கில்லை. இக்குறைப்பாடுகள் அரைக்கடத்தி இலேசர்களில் இல்லை. மாறாக அவற்றின் இயங்குதிறன் அதிகம். சிவப்புக்கல் இலேசருக்கு இயங்குதிறன் 1% என்றால்அரைக்கடத்தி இலேசருக்கு அது 60 70% அதை 90% ஆக உயர்த்த இயலும். இதனால் நேரடியாக மின்னாற்றலை ஒளியாற்றலாக மாற்றலாம். அரைக்கடத்தி இலேசர்களின் சிறப்புகள் l, இவற்றின் கதிர்வீச்சு அதிர்வெண்ணில் காந்தப்புலத்தைக் கொண்டு எளிதாக மாற்றத்தை ஏற்படுத்தலாம். 2. அதே சமயம் வெளியேறு அதிர் வெண் அதிக நிலைப்புடையது. இது வளி இலேசர்களுக்கும் உண்டு. 3. இவை நேரடியாக மின்னோட்டத்தினால் தூண்டப்படு கின்றன. தூண்டு மின்னோட்டத்தைப் பயன்படுத்தி, இவற்றைக் கட்டுப்படுத்தலாம். அரைக்கடத்தி இலேசர்களின் குறைகள் 1. இருப்பினும், இவற்றின் வெளியேறுஆற்றல் மிக அதிகம் எனக் கொள்வதற்கில்லை. 2. இவை உண்டாக்கும் கற்றையின் ஒற்றை அலைத்தன்மை, ஒருங்கியைவு, ஒரு போக்குத்தன்மை ஆகியவை வளி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:லேசர்_அறிவியல்.pdf/27&oldid=886971" இலிருந்து மீள்விக்கப்பட்டது