18 இடையே உள்ள தொலைவு 4,00,000 கி.மீ. இத்தொலையில் சில கிலோமீட்டர் குறுக்களவுள்ள புள்ளியினை உண்டாக்க இயலும், வழக்கமான துருவு ஒளி உண்டாக்கும் புள்ளி 40,000 கி.மீ. குறுக்களவு உள்ளதாக இருக்கும். ஒரு வினாடியில் ஒரு மில்லியனில் (பத்து இலட்சத்தில்) ஒரு பங்கு நேரத்தில் கார்பன் ஆவியாக்கக்கூடிய ஆற்றல் இலேசர் கற்றைக்கு உண்டு. இயற்கையிலுள்ள மிகக்கடினமான பொருள் வைரம், ஒரு வினாடியில் இரு மில்லியனில் இருபது இலட்சத்தில்) ஒரு பங்கு நேரத்தில் வயிரத்தால் துல்லியத்துளைகளை இலேசர் கற்றை இடவல்லது. சிவப்புக்கல் இலேசரை விட வளி இலேசரின் துல்லிய தூண்டுமாற்றல் மிகச் சீரானது. இது 40 - 90 வாட் 9,400 - 15,500 ஆங்ஸ்டாம்களுக்கிடையே உள்ள அகச்சிவப்புபப்பகுதியைச் சுற்றி இலேசர் கதிர்வீச்சு உண்டாகிறது. 1533 ஆங்ஸ்டாம் அலைநீளம் மிக உயர்ந்த செறிவினைக் கொண்டது. பார்வைப்பகுதியில் 6328 ஆங்ஸ்டாம் அளவுக்கதிர்வீச்சு உண்டாக்கப்பட்டுள்ளது. ஈலியம்-நியான் இலேசரின் வெளியேறு ஆற்றல் 0.5 முதல் 10 மில்லிவாட் வரை உள்ளது. ஆனால் ஆய்வுநிலை மாதிரிகள் 100 மில்லிவாட் வெளியேறு ஆற்றலை உண்டாக்குபவை. 2,000 மீட்டர் தொலைவில் உள்ள மாந்தனின் கண்ணைத்தாக்க வல்லது இலேசர் ஒளிக்கற்றை இலேசரை ரேடார் கருவியில் பொருத்த, அடுக்களை ஸ்டவ் அளவுள்ள பொருளை 8 கல்தொலைவிலிருந்தே நுணுக்கமாக ஆராய இயலும், 5. இலேசரின் இதயமும் துணைப்பகுதிகளும் இலேசரின் இதயம் நுண்குழாய். ஆடிகள், சாளரங்கள் முதலியவை துணைப்பகுதிகள். இவை பற்றி இவ்வியலில் காண்போம்.
பக்கம்:லேசர் அறிவியல்.pdf/29
Appearance