உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:லேசர் அறிவியல்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 உள்வரு ஆற்றிலில் உள்ள துடிப்புகளின் எண்ணிக்கையைக் கொண்டு, பொருள் உள்ளதொலைவை நாம் உறுதி செய்யலாம். இதைத் தகுந்த முறையில் மாற்றி, உயரமானியாகவும் தளமட்டமானியாகவும் பயன்படுத்தலாம். இது எளிதில் எடுத்துச் செல்லக்கூடியது. ஆறுகல் தொலைவு அளவுக்குத்துல்லியமாக அளவை செய்யலாம். நில அளவையாளர்களுக்கு இது ஒரு கொடையாகும். இலேசர் சுழல்கருவி இதில் சுழலும் பகுதிகள் இல்லை. எனவே, இது நீண்ட காலம் உழைக்கக்கூடியது. இது அதிக நுண்ணுணர்வும் நிலைப்பும் உடையது. சதுரவடிவமுள்ளது. இச்சதுரத்தில் நான்கு ஈலிய-நியான் இலேசர்கள் அமைக்கப்பட்டுள்ளன. வெளியேறும் குறிபாட்டை, எண்கொண்ட தாக்கலாம். இவ்வகையில் கணித எந்திரத்தோடு இதைப்பயன்படுத்தித் தானியங்கு கப்பல் போக்குவரத்திற்கும் பயன்படுத்தலாம். வளி இலேசர், சுழல் கருவி பருமனுள்ளது. நெருங்கி அமைந்ததும் எடை குறைவானதுமான இலேசர்களைப் புதிய சுழல்கருவிகள் பயன்படுத்துகின்றன. இவை ஒத்த சமபக்கமுக்கோணங்களில் அமைக்கப்படுகின்றன. இலேசர் துப்பாக்கி இது நீண்ட நாள் உழைக்கக்கூடிய வளி இலேசர். இது செறிவான புற ஊதாஒளியைத் தொடர்ச்சியாக உண்டாக்குகிறது. இலேசர் தண்டைத் தூண்டும் ஒளியாற்றலை இலேசர் குழாய் வழங்குகிறது. ஒரு மறிப்பானுக்குள் வைக்கப்பட்டுள்ள விளக்கிலிருந்து ஒளி வழக்கமாக வருகிறது. மறிப்பான், ஒளியை இலேசருக்குச் செலுத்துகிறது. இக்கருவி ஒளிப்படத் தொழில், வேதிஇயல் முறைகள், தொழிற் சாலைகள், உயிரிய மருத்துவம் முதலியவற்றில் பயன்படுகிறது. 7கிலோ எடையுள்ள ஒரு துப்பாக்கியை அமெரிக்கா உருவாக்கியுள்ளது. இது ஒரு வினாடிக்கு 27 குண்டுகளைச் சுடும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:லேசர்_அறிவியல்.pdf/34&oldid=886990" இலிருந்து மீள்விக்கப்பட்டது