உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:லேசர் அறிவியல்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 象 প্রী 3. முதன் முதலில் அமைக்கப்பட்ட லிடார் கண்ணுக்குத் தெரியாத சில காற்று வெளிப்பிறழ்ச்சிகளையும் மேகங்களையும் மூடுபனி அடுக்குகளையும் கண்டறிந்தது. வானம் தெளிவாக இருந்த சமயத்தில் 16 நிமிட அளவுக்கு வேறுபட்ட உயர்ச்சிக் கோணங்களில் உற்று நோக்கல்கள் இந்தலிடாரைக் கொண்டு செய்யப்பட்டன. வேறுபட்ட துகள் செறிவுள்ள மூன்று அடுக்குகள் காற்று வெளியில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டன. 4. மேகத்தை உற்று நோக்கும் மற்ற முறைகளைக் காட்டிலும் துடிப்பு லிடாரின் செயல் மிக மேன்மையானது. 40,000 அடி உயரத்திலுள்ள சிர்சஸ் மேகங்களை இந்த லிடார் கண்டறியும். 20 கல் தொலைவிலுள் குயுமுலஸ் மேக உச்சியினை அது அளக்கும். மழையின் பொழுதும் பணியின் பொழுதும் மேகக் கரைகளை அளக்கலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:லேசர்_அறிவியல்.pdf/44&oldid=887008" இலிருந்து மீள்விக்கப்பட்டது