7 இலேசர் நுணுக்கங்கள் இலேசர் வளர்ச்சியில் பல இலேசர் நுணுக்கங்கள் உருவாகியுள்ளன. அவற்றில் ஒரு சிலவற்றைப் பற்றியும் அவற்றின் வாய்ப்புகள் பற்றியும் இங்குக் காண்போம். ஊடுபொருள் தேர்வு தேவைப்படும் இலேசர் கற்றையின் ஆற்றல், அதன் அதிர்வெண் ஆகியவற்றைப் பொறுத்து ஊடுபொருள் தேர்வு அமைகிறது. காட்டாக, ஈலியம்-நியான் ஊடுபொருள் சிலமில்லிவாட்டுகள் அளவுள்ள ஆற்றல் கற்றையினை அளிக்கிறது. ஆனால், கார்பன்-டை-ஆக்ஸைடு இலேசரின் ஆற்றல் ஒரு வாட்டு முதல் சிலவாட்டுகள் வரை இருக்கும். சுவடு மாசுகள் ஊடுபொருள்களில் இருக்குமானால், இலேசர் தொகுதியின் இயங்குதிறன், வெளியேறு ஆற்றல் ஆகியவை அதிக அளவுக்குக் குறையும். ஆகவே, ஊடுபொருள்கள் மிகத்துய்மையானதாக இருக்க வேண்டும். இத்தகைய பொருள்கள் முன்னேறிய மேனாடுகளிலேயே உள்ளதால், நாம் அவற்றை இறக்குமதி செய்யவேண்டியுள்ளது. வளிப்பொருள்கள், தயார் செய்த கலவையாக மூடிய ஒரு லிட்டர் குடுவைகளில் அடைக்கப்பட்டு அனுப்பப்படுகின்றன. தேவைப்பட்ட குறுக்களவுகளில் திண்மப் பொருள்கள் தண்டுவடிவத்தில் வருகின்றன. அண்மைக்காலத்தில் கல்கத்தாவிலுள்ள மையக்கண்ணாடி மட்பாண்ட ஆராய்ச்சி நிறுவனம் கண்ணாடியில் நியோடைமியத்தை அமைத்துள்ளது. இந்த அறிவினைத்1 துர்க்காபூரிலுள்ள பாரத ஒளி இயல் கண்ணாடித் தொழிற்சாலைக்கு இந்நிறுவனம் வழங்குகிறது. வளிக்கலவையினை மாற்றல் இலேசர் குழாய் முதலில் வெற்றிட எக்கிகளால் உயர்ந்த அளவுக்கு வெற்றிடமாக்கப்படுகிறது. இதற்குப் போதிய கருவிகள்
பக்கம்:லேசர் அறிவியல்.pdf/46
Appearance