37 செய்யலாம். இது தற்பொழுது அதிகம் நடைபெறும் ஆராய்ச்சித்துறையாகும். தேர்ந்தெடுத்த ஒரிமங்களைத் தூண்டியும் பிரித்தும் அணுஆற்றல் திட்டத்தில் அவற்றைப் பயன்படுத்தலாம். அதிக ஆற்றலுள்ள மிகக் குறுகிய இலேசர் துடிப்புகள் குவிக்கப்படும் பொழுது, ஆற்றல் செறிவு மிக அதிமாயிருக்கும். ஒரு சிறிய உட்குழிவான கண்ணாடி உருண்டையில் உள்ளவளியில் ஒரே சீராக இலேசர்துடிப்புகளைச் செறிவடையச் செய்ய, அவ்வளி அதிகச் செறிவடையும். அதாவது, விண்மீன் கூட்டச் செறிவினையும் அடையவல்லது. 100 மில்லியன் கே.வி. வெப்பநிலை உண்டாகும். இந் நிலைம்ைகளில் இலேசான தனி மங்களான டியூட்ரியம், டிரைடியம் ஆகியவற்றின் அணுவினைகள் நடைபெற வாய்ப்புண்டு. ஆற்றல் வாய்ந்த அல்லணுக்களும் (நியூட்ரான்கள்) வெளிப்படும். தொடக்கத்தில் வரையறுக்கப்பட்ட இலக்குடன் நடத்தப்படும் இலேசர் பிணைப்பு ஒருநாள் அணுஉலையில் நிறைவேறலாம். சூழ்ந்துள்ள சீராக்கு உறையிலிருந்து அல்லணு ஆற்றலைப் பிரிக்கலாம். மிகக் குறுகிய இலேசர்துடிப்புகளை உண்டாக்கி நேனோ செகண்டு பகுதிகளிலும் பைக்கோ செகண்டு பகுதிகளிலும் உயிரியப் பல்படிகள், அணுக்கள், மூலக்கூறுகள் ஆகியவற்றின் அடிப்படைச் செயல்களை ஆராயலாம். இவ்வழியில் ஒளிச்சேர்க்கை முதலிய செயல்களையும் ஆராயலாம். அதே போல் வேதிவினை வீதங்கள் அலைக்கழிக்கப்பட்டு, இலேசரால் தூண்டப்பட்ட ஒளிர்வினை உற்றுநோக்கி, அவற்றை அளக்கலாம். மின் காந்த நிறமாலையினை உள்ளடக்கிய, அகன்ற அதிர்வெண் எல்லைகளில் தொடர்ந்து ஒத்திசையும் இலேசர்கள் வேண்டும் என்பதே நிறமாலை இயல் அறிஞர்களின் கனவாகும். இக் கனவு நனவாகும் நிலை நெருங்கிக் கொண்டுள்ளது. ஒத்திசையம் கிரிப்டான் புளோரைடு முதலிய பல கருவியமைப்புகளின் பயன்பெரிதும் வளர வாய்ப்புள்ளது. இவ்வகை இலேசர் ஒரிமப் பிரிவிலும் வேதி இயலிலும் பல ஒளியணுச் செயல்களிலும் அதிகம் பயன்படக்கூடியது.
பக்கம்:லேசர் அறிவியல்.pdf/48
Appearance